நாமக்கல், மார்ச் 23- கொரோனா வைரஸ் (கோவிட்-19) 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. இந்த அறையில் பொதுசுகாரத் துறை மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர் கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலங் களிலிருந்து வந்த நபர்களின் விவரங்கள் மற்றும் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. விமான நிலை யங்களில் இருந்து வருகின்ற தகவல்களை கொண் டும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் குறித்த விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் மூலமாக பெற்று அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தபோது, பேரிடர் மேலாண் மைத்துறை வட்டாட்சியர் இராமநாதன் உட்பட பொதுசுகாரத்துறை மருத்துவ அலுவலர்கள், சுகா தார ஆய்வாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவ லர்கள் உடனிருந்தனர்.