மயிலாடுதுறை, மே 26- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் காட்டுச்சேரியில் கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் கருணாநிதியால் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டு, 100 வீடுகள் கட்டப்பட்டு பல்வேறு சமூக மக்களும் வசிக்க அளிக்கப்பட்டது. தற்போது வீடுகள் முற்றிலும் சேதமடைந்து விட்டதால் அவற்றை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து புதிய வீடுகள் கட்டுவ தற்கான பணி துவங்கியுள்ளதை வியாழனன்று மயிலாடுதுறை ஆட்சி யர் லலிதா ஆய்வு செய்தார். செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி, பொறியாளர் சோமசுந்தரம் உடன் இருந்தனர்.