tamilnadu

img

காவிரி, பொன்னியாறு, திருமணிமுத்தாறு நதிகள் இணைப்புத் திட்டத்தினை நிறைவேற்றுக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல். பிப். 18– காவிரி–பொன்னியாறு–திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என வலியு றுத்தி நாமக்கல்லில் தமிழக விவசா யிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எலச்சிபா ளையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த ஆர்பாட்டத் திற்கு, மாநிலபொதுச்செயலாளர் சுந்த ரம் தலைமை வகித்தார்.முன்னதாக, எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத் தில் இருந்து, வட்டாரவளர்ச்சி அலுவ லகம் வரையில் நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வலியு றுத்தி, ஆவேச  முழக்கங்களை எழுப்பி யபடி ஊர்வலமாக சென்றனர்.  இதனையடுத்து, எலச்சிபாளை யத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மேட்டூர் அணைக்கு 120 அடிக்குமேல் தண்ணீர் வரும் காலங்களில், வீணாக கடலில் கலக்கும் காவிரி உபரிநீரை பொன்னியாறு, திருமணிமுத்தாற்றில் கலக்கும் விதத்தில் நதிகளை இணைக்க வேண்டும். அவ்வாறு செய் தால், மாவட்டத்தில் இருக்கும் அனைத்து ஏரிகளும் வளம்பெறும். கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலமாக இத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி போராடி வருகிறோம். இத்திட்டம் நிறைவேறும் வரையில் போராடு வோம் என தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் பொன்னுசாமி, வட் டாரத் தலைவர் லோகநாதன்,  எலச்சி பாளையம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், வட்டாரச் செயலாளர் ஜெயராமன்  உள்பட 150க்கும் மேற்பட்ட விவசாயி கள் கலந்து கொண்டனர்.