tamilnadu

img

கந்துவட்டி கொடுமையால் தம்பதியினர் தற்கொலை- இருவர் கைது

நாமக்கல், ஆக. 25- நாமக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், கைலாசம்பாளையம் அருகே  உள்ள கருங்கல்காட்டைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளி யான சுப்ரமணி (40), அவரது மனைவி மேனகா (38) மற்றும் அவர்களின் குழந்தைகள் பூஜாஸ்ரீ, நவீன்குமார் ஆகியோர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலைக்கு முயன்றனர்.

இதில், கணவன், மனைவி கடந்த ஆக.20ஆம் தேதியன்று இறந்த நிலையில், குழந்தைகள் இருவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உயிர்தப்பினர்.  இந்நிலையில், இவர்களை தற்கொலைக்கு தள்ளிய கந்து வட்டி கும்பலைச் சேர்ந்த வைரவேல் (45) மற்றும் ஆத்தூரைச் சேர்ந்த அய்யாசாமி (48)ஆகிய இரு வரையும் திங்களன்று திருச்செங்கோடு நகர காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், இருவரையும் நீதி மன்றத்தி்ல் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் மேலும் ஒருவரை போலீ சார் தேடி வருகின்றனர்.