tamilnadu

img

ஈரானில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க மீனவ அமைப்பினர், சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில்:
ஈரான் நாட்டில் சிறை பிடிக்கப்பட் டுள்ள தமிழக மீனவர்களை விரைந்து மீட்டு தாயகம் சேர்க்க வேண்டுமென மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே மூலம் மத்திய -மாநில அரசுகளுக்கு அளித்துள்ள மனுவிபரம் வருமாறு:

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சார்ந்த பெர்க்மான்ஸ் மகன் அந்தோணி அடிமை (40), ஆரோக்கியபுரத்தை சார்ந்த மரிய ராபின்சன் மகன்ஆன்றணி ஜெபா (37), வாணிய குடியைசார்ந்த சேசு அந்தோணி மகன் ஆட்லின்கவுதம் (26), கடலூரைச் சார்ந்த பூதலிங்கம் மகன் சாமி அய்யா (44) ஆகியோர் சவுதி அரேபிய நாட்டில் அரேபியமுதலாளி காலித் சவுத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். மே மாதம்20 ஆம் தேதி மீனவர்கள் வழக்கம்போல்அரேபிய முதலாளி விசைப்படகில் சவுதிநாட்டிலிருந்து ஜூபைல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஈரான்கடல் எல்லை தாண்டியதாக ஈரான் நாட்டுகடலோர காவல்படை மீனவர்களை கைது செய்து ஈரான் நாட்டில் புஷர் என்ற இடத்தில் சிறை வைத்துள்ளனர். மேலும் கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தை சார்ந்த பணி பிள்ளை மகன்கவுதம் (29), சின்ன விளையை சார்ந்த சாஜு, ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த காளிமணி மற்றும் மாரி செல்வம் ஆகியோர் சவுதி அரேபிய நாட்டில் அரேபியமுதலாளிக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடித் தொழில் செய்து வந்தனர்.இம்மீனவர்களும் மே மாதம் 14 ஆம் தேதிசவுதி அரேபிய நாட்டில் உள்ள ஜுபைல்மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்கள். மேமாதம் 20 ஆம் தேதி இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது ஈரான் நாட்டு கடலோர காவல்படை மீனவர்கள் ஈரான்கடல் எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டி கைது செய்து ஈரான் நாட்டில் புஷர்என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைத்து உள்ளார்கள்.மீன்பிடிக்க கடலுக்குள் சென்று இருந்த மீனவர்களை மீனைப் பிடிப்பது போல் ஈரான் கடற்படை பிடித்துச் சென்றுசிறை வைத்துள்ளது மீனவர் மக்களிடையே அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று நோயானது ஈரானில் பரவிக் கொண்டிருக்கின்ற நிலையில் சிறையில் இருக்கின்ற மீனவர்களிடம் இது அச்சத்தை அதிகரித்துள்ளது. மீனவர்களின் குடும்பத்தாருக்கும் கவலை யை அதிகரித்துள்ளது. 

மீனவர்களுக்கு கடினமான வேலையை ஈரான் சிறையில் கொடுப்பதாகவும், போதிய உணவு கிடைக்கவில்லை என்றும், உறவினர்களோடு பேசுவதற்கு எந்த வாய்ப்பும் தரப்படவில்லை என்றும், சிறையில் பக்கத்து அறையில் இருக்கின்ற சக தமிழக மீனவர்களுடன் பேசுவதற்கு அனுமதி மறுக்கப் படுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா நோயின் பாதிப்பு சிறையில் சிலருக்குஇருப்பதாகவும் அது தங்களை பாதிக் கும் முன்பு தங்களை உடனடியாக சிறையிலிருந்து மீட்க வேண்டும் எனவும் மீனவர்கள் தங்களது உறவினருடன் கவலையோடு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே குவைத் நாட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது தமிழக மீனவர்கள் ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் இதுவரை மீட்கப்படாதநிலையில் தற்போது 8 தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரானில் உள்ள புஷர் சிறையில் தற்போது 21 தமிழக மீனவர்கள் இருப்பதாகவும் மீனவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே, தற்போது சிறை பிடிக்கப்பட் டுள்ள 8 தமிழக மீனவர்கள் உட்பட ஏற்கனவே சிறை பிடிக்கப்பட்டுள்ள 13 தமிழக மீனவர்கள் சேர்த்து 21 மீனவர்களையும் காலம் தாழ்த்தாமல் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் முன்புதமிழக மீனவர்களை மீட்டு தாயகம் சேர்க்க வேண்டுமென அதில் கூறப் பட்டுள்ளது.

ஆர்.செல்லசுவாமி மனு
இந்நிலையில், ஈரான் நாட்டிலிருந்துதாயகத்திற்கு திரும்ப முடியாமல் தவிக்கும் 44 தமிழக மீனவர்களையும், ஈரான்சிறைகளில் வாடும் 21 மீனவர்களையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை தமிழக அரசு எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், ஈரானிலிருந்து கப்பலில் நாட்டை விட்டு வெளியேறுவதற் கான வெளியேற்ற முத்திரைப் பெற்ற பிறகு தமிழகம் திரும்ப இயலாத நிலைக்கு தள்ளப்பட்ட 44 மீனவர்களின் நிலை மேலும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. வெளியேற்ற முத்திரை பெற்றுவிட்டதால் அரசு ரீதியான உதவிகளை, ஈரான் அரசிடம் பெற இயலாத நிலைக்கு அந்த மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அந்த விடுபட்ட மீனவர்கள் 44 பேரையும் மீட்க விமானம் ஏற்பாடுசெய்து அதற்கான பயணச் செலவை தமிழக மீனவர்களை ஏற்க கூறியுள்ளதாக தெரிகிறது. வாழ்வாதாரத்திற்காக கூலிவேலைக்கு சென்றவர்களிடம், நான்குமாதங்களாக வேலையும், வருமானமுமின்றி தவித்து வருபவர்களிடம் இவ்வளவு பெரிய தொகையினை பயணக்கட்டணமாக கேட்பது வேதனைக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், குமரி மாவட்டம் உட்பட தமிழகத்திலிருந்து தொழிலுக்காக சென்ற21 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது ஈரான் நாட்டு காவல் துறையால் சிறைபிடிக்கப்பட்டு ஈரான் நாட்டுசிறையில் வாடி வருகின்றனர். இந்தசெய்தி கேட்ட அவர்களது குடும்பத்தினர் மிகவும் துயரில் உள்ளனர். எனவேமத்திய மாநில அரசுகள் ஈரான் சிறைகளில் வாடும் 21 தமிழக மீனவர்களையும்உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.