tamilnadu

மோடி அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து செப்.25ல் மறியல்... குமரி மாவட்ட மக்கள் இயக்கங்கள் முடிவு

நாகர்கோவில்:
மத்திய  அரசு நிறைவேற்றிய விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை கண்டித்து தமிழகத்தில் செப்டம்பர்  25 நடைபெறும் சாலைமறியல் போராட்டத்தை யொட்டிசிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் பார்வதிபுரத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சைமன் சைலஸ் தலைமை வகித்தார். இதில், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ரவி, துணை தலைவர் என் முருகேசன், சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமோகன், வாலிபர் சங்கமாவட்ட செயலாளர்  எட்வின் பிறைட், பொருளாளர் வி.ரெதீஸ்உட்பட அனைத்து  சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், குமரி மாவட்டத்தில்  நாகர்கோவில் டெரிக் சந்திப்பு, மார்த்தாண்டம் பேருந்துநிலையம் சந்திப்பு,  மஞ்சாலுமூடு ஆகிய இடங்களில் செப்டம்பர் 25 இல் மறியல் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.