நாகர்கோவில்:
பாரதப் பிரதமரின் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின்கீழ் ரூபாய் 6 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில். தமிழ்நாட்டில் சுமார் 2 ஆயிரம் கோடிக்கும் மேல்ஊழல் நடைபெற்றுள்ளது. தமிழக விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீதுசிபிசிஐடி மூலம் விசாரணை நடத்த வேண்டும். மேலும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள்சங்கம் சார்பில் செவ்வாயன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கல்குளம், கிள்ளியூர், திருவட்டார், விளவங்கோடு தாலுகா அலுவலகங்கள் முன்பு என 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஆர்.ரவி தலைமை வகித்தார். நிர்வாகிகள் எஸ்.கே.பிரசாத், ஆலிவர், சி.சுப்பிரமணியம், மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோவாளைவட்டார செயலாளர் மிக்கேல், வட்டாரகுழு உறுப்பினர் மணி ஆகியோர் உட்படபலர் கலந்து கொண்டனர்.மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெ.சைமன் சைலஸ் உட்பட மாவட்ட,வட்டார நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.