tamilnadu

img

குமரி மாவட்ட மக்களின் வேலை - வாழ்வாதாரத்தை சீர்குலைக்க முயற்சி

மேலும் ஆயிரம் ஹெக்டேர் அரசு ரப்பர் தோட்ட பகுதியை வனத்துறைக்கு ஒப்படைக்க எதிர்ப்பு - மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

நாகர்கோவில், ஆக.13- கன்னியாகுமரி மாவட்டம் எவ்வித குறிப்பிடத்தகுந்த தொழிற்சாலைகளும் இல்லாத நிலையில் மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் தனியார் துறைக்கு சொந்தமாக சிறியதும், பெரியதுமான ரப்பர் தோட்டங்கள் மலையோர பகுதி மக்களுக்கு சிறிய  அளவில் வேலைகளை வழங்கி வந்தது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் அரசு துறையில் ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வேலை வாய்ப்பி னை பெருக்கிட வேண்டும் என்ற கோரிக் கையினை அப்போதைய அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் முன்வைத்து தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து சுமார் 5000 ஹெக்டேர் பரப்பளவில் அரசு ரப்பர்  தோட்டம் உருவாக்கப்பட்டு ரப்பர் உற் பத்தியும் அதை சார்ந்த பணிகளும் துவங்கப்பட்டன. கீரிப்பாறை, பெருஞ் சாணி, மைலார் ஆகிய இடங்களில் ரப்பர் தொழிற்சாலைகளும் துவங்கப் பட்டு செயல்பட்டு வந்தன.

இதன் மூலம் முதலில் மூவாயிரத் திற்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து அவர்களின் குடும்ப ங்கள் பிழைத்து வந்தன. பின்னர் அரசு தோட்டம் 1984 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு ரப்பர் கழகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு, உரிய காலங்களில் ரப்பர் மறு நடவு பணிகள் மேற்கொள்வது, அவ்வப் போது களையெடுப்பு பணிசெய்து தொழிலாளர்கள் சிரமமின்றி பால் வடிப்பு பணிகள் மேற்கொள்ள உத விடுதல் மற்றும் சில குறைபாடுகளை களைவதுடன் மூன்று தொழிற்சாலை களையும் விரிவுபடுத்தி வேலைவாய்ப்பு களை பெருக்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு போன்ற அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

மாநில பொதுத்துறையான இந்நிறு வனத்தை பாதுகாக்கும் நடவடிக்கை யை தமிழக அரசும், அரசு ரப்பர் கழக நிர்வாகமும் எடுக்கவில்லை. அதற்கு நேர்மாறாக சில ஆண்டுகளுக்கு முன் அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்த மான ஆயிரம் ஹெக்டேர்  பரப்பளவு சொத்தினை ஏற்கனவே ஒருமுறை வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது டன் இப்போது மேலும் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு சொத்தினை வனத்துறைக்கு ஒப்படைத்திட ரப்பர் கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.   ஏற்கனவே மைலார், பெருஞ்சாணி என இரு ரப்பர் தொழிற்சாலைகளை மூடிய நிர்வாகம் இப்போது அரசு ரப்பர்  கழக நிலப்பரப்பின் ஐந்தில் இரண்டு பகுதியான சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் சொத்தினை வனத்துறைக்கு ஒப்படை ப்பதன் மூலம் இந்த நிறுவனம் படிப்படியாக மூடப்படும் நிலைக்கு தள்ளியுள்ளது. இதனால் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை யிழப்பதுடன் குமரி மாவட்ட மக்க ளுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஏற்கனவே வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்ட ஆயிரம் ஹெக்டேர்  சொத்தினை மீண்டும் ரப்பர் கழகம் திரும்ப எடுத்துக்கொள்வதுடன் இப்போது இரண்டாவது கட்டமாக ஆயி ரம் ஹெக்டேரை ஒப்படைப்பது என்ற  முடிவினையும் கைவிட வேண்டும். குமரி மாவட்ட மக்களின் வேலைவாய்ப்பினை யும், வாழ்வாதாரத்தினையும் பாது காத்திட அரசு ரப்பர் கழகத்தின் பரப் பளவு பகுதியினை குறைக்காமல் ரப்பர் கழகம் சிறந்த முறையில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று மாவட்ட அரசு ரப்பர் கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அண்ணாதுரை, எஸ்.ஆர்.சேகர், உஷா பாசி, என்.எஸ்.கண்ணன், எஸ். சி.ஸ்டாலின் தாஸ், எம்.அகமது உசேன், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்க மோகன், தோட்ட தொழிலாளர் சங்க  மாவட்ட பொதுச்செயலாளர் வல்ச குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டது.