tamilnadu

img

மரக்கன்றுகள் நடும் விழா

 சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆலாலசுந்தரம் கிராமத்தில் இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்  ஆலாலசுந்தரம் ஊராட்சி பசுமை இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் தூய்மை இந்தியா சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் பாரத் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் சங்கரி முருகன் வரவேற்றார்.  ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மதனகோபாலன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் மாலதி ரெங்கராஜன் தென்னை மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஊராட்சி உறுப்பினர்கள் சந்திரசேகர், சுதந்திரவள்ளி, தேவேந்திரன், ரபேக்கால், மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  பொதுஇடங்கள், கோயில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் 500 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.