தரங்கம்பாடி, அக்.5- நாகை மாவட்டம், மயிலாடு துறை அருகேயுள்ள சோழம் பேட்டை கிராமத்தில் மணல் கொள்ளையால் உயிரிழந்த மாணவ ரின் இறப்பிற்கு காரணமான குற்ற வாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டு மென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் சனியன்று சோழம் பேட்டை அண்ணா சிலை அருகே வட்ட செயலாளர் சி.மேகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டக்குழு உறுப்பினர் மாசிலாமணி, கிளை செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், சிங்கா ரவேலன்,மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன், வட்டக் க்குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர். சோழம்பேட்டை கிராமத்தி லுள்ள வானமுட்டி பெருமாள் கோவில் குளத்தை தூர்வாரு வதாகக் கூறி அதேப் பகுதியில் வசிக்கும் காவல்துறையில் பணி யாற்றும் கோழிகுத்தி மணி (எ) மணிகண்டன் என்பவர் தனது உறவினர் ஒருவரின் பெயரில் அனுமதிப் பெற்று விதிகளை மீறி சட்ட விரோதமாக நாள் தோறும் பல நூறு லாரிகளில் மணலை கொள்ளையடித்தாராம். அதிகா ரத்தில் இருப்பவர் என்பதால் பொது மக்கள் மணல் கொள்ளையை எதிர்க்காததை பயன்படுத்தி 50 அடி ஆழத்திற்கும் மேல் குளத்தை தோண்டி 1500 க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மணலை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தினார். இதுகுறித்து பலமுறை வட்டாட்சியர், ஆர்.ஐ,வீ.ஏ.ஓ ஆகி யோரிடம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நேரில் புகார் அளிக்கப்பட்டும் ஒரு நடவடிக்கையும் இல்லாத நிலையில் 26/09/19 அன்று தனது நண்பர்களு டன் குளத்தின் கரையில் அமர்ந்து தூண்டில் போட்டுக்கொண்டிருந்த அதேப்பகுதியை சேர்ந்த சண்முகம்-பிரேமா தம்பதியினரின் மகனான 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டி ருந்த சஞ்சய்க்குமார் கரை உடைந்து குளத்தினுள் விழுந்துள்ளார். அதிகளவு ஆழமாக இருந்ததால் நீரில் சிக்கி சஞ்சய்குமார் பரிதாப மாக உயிரிழந்தார். பல மணி நேரம் தேடி தீயணைப்புத் துறையினர் உடலை கைப்பற்றினர். உடல்கூறு ஆய்வுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது. மணல் கொள்ளையால் சிறு வனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதா கவும், இது போன்ற துயர சம்ப வங்கள் நடந்து விடக் கூடாது என பலமுறை முறையிட்டும் அலட்சிய மாக இருந்ததாலேயே ஆழத்தில் சிக்கி சஞ்சய்குமார் பரிதாபமாக இறந்துள்ளார். இறப்பிற்கு காரணமான வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், மணல் எடுத்த கோழிகுத்தி மணி ஆகியோர் கள் மீது உரிய வழக்கு பதிந்து கைது செய்திட வலியுறுத்தியும், பிள்ளையை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண தொகை வழங்கிட வலியு றுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.