tamilnadu

img

சூரிய கிரகணம் காணும் முறை பயிற்சி  

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏ.வி.சி.கல்லூரியில் அறிவியல்  கூட்டமைப்பு சார்பில் வளைவு சூரிய கிரகணம் பார்ப்பது பற்றிய பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி செயலர் கி. கார்த்திகேயன் தலைமை வகித்தார். முதல்வர் ஆர். நாகராஜன் முன்னிலை வகித்தார். இந்திய அணுசக்தி துறை விஞ்ஞானி ஆர். வெங்கடேசன், வளைவு சூரிய கிரகணம் நிகழம் முறை அதை பாதுகாப்பாக காணும் முறை மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எளிய உபகரணங்களை கொண்டு சூரிய கிரகணத்தை காணும் முறை குறித்து விளக்கி பேசினார். அறிவியல் கூட்டமைப்பு செயலாளர் பா. குமார் (பிஎஸ்சி வேதியியல் மூன்றா மாண்டு) வரவேற்றார். பேராசிரியர் டாக்டர் டி.பிரபு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி என். ஞானப்பிரியா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை தலைவர் மற்றும் அறிவியல் மன்ற துணை தலைவர் கே. சிங்காரவேலன், துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். இதில் கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் சுமார் 300 கலந்து கொண்டனர்.