சீர்காழி, அக்.5- கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஒட்டியுள்ள பழமையான டெலிபோன் கோபுரத்தை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடியில் பழமையான ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் உள்ளது. பயன் பாட்டில் இல்லாமல் இடிந்து விழும் நிலை யில் உள்ள இந்த பழமையான ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தையொட்டி 15 வருடங்களுக்கு முன்பு ஊராட்சி அலுவல கத்தின் பயன்பாட்டிற்காக வயர் இணைப் பில்லாத டெலிபோன் கொடுக்கப்பட்டது. இந்த டெலிபோன் இயங்குவதற்கு இந்த டவர் பயன்பட்டது. இரண்டு அல்லது 3 வருட காலத்தில் இது போன்ற டெலிபோன்கள் பல ஊராட்சிகளில் பழுதடைந்து செயல் படாமல் போனது. இதே போல் அனைத்து ஊராட்சிகளி லும் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டி டங்களில் வைக்கப்பட்டிருந்த டெலிபோன் கள் மற்றும் பல கோபுரங்கள் அகற்றப் பட்டன. ஆனால் ஒரு சில இடங்களில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடங்கள் அருகே அமைந்துள்ள டெலிபோன் கோபுரங்கள் எந்த பயனுமின்றி அப்படியே உள்ளன. இது போன்ற இரும்பு கோபுரங்கள் மழை மற்றும் அதிக காற்று வீசினால் எளிதில் முறிந்து விழும் நிலை ஏற்படலாம். அப்படி முறிந்து விழுந்தால், உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உடனடியாக பழமை யான கட்டிடத்தையும் டெலிபோன் டவரை யும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேட்டங்குடி கிராம மக்கள் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வில்வநாதன், மாவட்ட ஆட்சிய ருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.