நாகப்பட்டினம், ஜூன் 6-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கநாகை மாவட்டக் குழுக்கூட்டம் நாகப்பட்டினத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ந.காவியன் தலைமை வகித்தார். செயலாளர் ப.பாலசுந்தரம், வருங்காலப் பணிகள் பற்றி விளக்கவுரையாற்றினார். மாநிலப் பொதுச்செயலாளர் எழுத்தாளர் களப்பிரன் சிறப்புரையாற்றினார். தமுஎசகச. மாநிலக்குழு முடிவின்படி வரும்ஜூலை 13,14 ஆகிய இருநாட்கள், நாகப்பட்டினத்தில் மாநிலக்குழுக் கூட்டத்தைச் சிறப்புற நடத்துவதென முடிவுசெய்யப்பட்டது. ஜூலை 13 அன்று புதிய கல்விக் கொள்கைஎனும் பொருளில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.