தரங்கம்பாடி, பிப்.24- இந்தியா வந்து தமிழ் மொழிக்காக உழைத்து ஆசிய மொழிகளிலேயே தமிழை முதன் முதலாக காகிதத்தில் அச்சு இயந்திரம் மூலம் அச்சேற்றி கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை தமிழில் முதன் முதலாக வெளிட்ட ஜெர்மனி நாட்டவரான தமிழறிஞர் சீகன்பால்கு 301 ஆவது நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. 1706 ஜூலை 9 அன்று நாகை மாவட்டம், தரங்கம்பாடிக்கு வந்த சீகன்பால்கு திருக்குறள், தொல்காப்பி யம், ஆத்திச்சூடி உள்ளிட்ட நூல்களை பல மொழிகளில் மொழிப்பெயர்த்து அச்சிட்டு வெளியிட்டு உலகறிய செய்த வர். சாதி,மத வேறுபாடுகளை உடைத் தெறிய பல்வேறு போராட்டங்களை தனது மனைவியுடன் செய்தவர். வெறும் 13 ஆண்டு மட்டுமே தரங்கம்பாடியில் வாழ்ந்த சீகன்பால்கு கல்வி, கலாச்சா ரம், சீர்த்திருத்தம், தமிழ் தொண்டு என பல புரட்சிகளை 300 ஆண்டுகளுக்கு முன்பே செய்தவர். 1719 பிப்ரவரி 23-ல் தனது 37 ஆவது வயதில் தரங்கம் பாடியிலேயே இறந்து போன அவரின் உடல் அவரால் கட்டப்பட்ட புதிய எருச லேம் ஆலயத்திலேயே அடக்கம் செய் யப்பட்டது. ஞாயிறன்று அவரது நினைவு தினத்தையொட்டி புதிய எருசலேம் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மலர் தூவி, மாலைகள் அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆலயத்தின் சபைகுரு சாம்சன் மோசஸ், சீகன்பால்கு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் ஜாஸ்மீன் எப்பர்ட் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து பேர ணியாக சென்று கடற்கரை சாலையில் உள்ள சீகன்பால்கு சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.