தரங்கம்பாடி, ஜூலை 9- தமிழை உலகறிய பரப்புவதையே முழு மூச்சாகக் கொண்டு தமிழ் நூல்களை காகிதத்தில் அச்சு இயந்திரம் மூலம் அச்சடித்து வெளியிட்ட ஜெர்மனி நாட்டை சேர்ந்த சீகன்பால்கு நாகை மாவட்டம் தரங்கம்பாடிக்கு வந்த 313 ஆவது ஆண்டு தினம் திங்களன்று கடைபிடிக்கப்பட்டது. தரங்கம்பாடி கடற்கரை அருகேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரி யாதை செய்தனர். பிஷப் ஜான்சன் பள்ளியில் சீகன்பால்கு வாழ்ந்த அவரது வீடு உள்ள வளாகத்தில் உள்ள பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரி யர் ஜான் சைமன் மகிபாலன் தலைமை வகித்தார். ஆசிரி யர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.