tamilnadu

img

நாகையில் மருத்துவக் கல்லூரிப் பணியை விரைவில் துவங்கிடக் கோரி கடையடைப்பு

நாகப்பட்டினம், டிச.12- நாகப்பட்டினத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டுமானப் பணியை விரைவில் துவங்க வலி யுறுத்தி, வியாழக்கிழமை அன்று, நாகையில் இந்திய வர்த்தகத் தொழிற் குழுமம், அரசியல் கட்சிகள், அனைத்து வணிக சங்கங்கள், அனைத்து சேவைச் சங்கங்கள், மீனவர் சங்கங்கள், தொழிற்சங் கங்கள் சார்பில், கடையடைப்பு, கவன ஈர்ப்புப் பேரணி ஆகியவை நடைபெற்றன. நாகப்பட்டினம் மாவட்டத்தில், ரூ.325 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி துவங்கிட மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கி யுள்ளது. இதற்காக நாகைக்கு அரு கிலுள்ள ஒரத்தூர் கிராமத்தை யொட்டி, 60 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்து, மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி யுள்ளார். இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறைப் பகுதியில் தான் மருத்துவக் கல்லூரியை அமைத்திட வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் அண்மைக் காலமாமப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், நாகப்பட்டினத்தில் தான் மருத்துவக் கல்லூரி அமைத்திட வேண்டும் என நாகைப் பகுதி மக்க ளும் வணிக மக்களும் போராட்டத் தைத் துவங்கியுள்ளனர்.    நாகை நகரம் முழுவதும் அனை த்துக் கடைகளும் மூடபட்டிருந்தன. பெரும்பான்மையான ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் ஓடவில்லை. கல்வி நிலையங்கள் திறந்திருந்தன. அரசுப் பேருந்துகள் காவல்துறையி னர் பாதுகாப்புடன் இயங்கின. பேரணி, நாகைப் புதிய பேருந்து நிலையத்தி லிருந்து துவங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது.