tamilnadu

img

தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி  நினைவு தினம் 

 நாகப்பட்டினம், ஆக.19- சட்டமன்ற உறுப்பினராகவும், நாகை மாவட்டம், தலை ஞாயிறு ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகவும், பாங்கல் ஊராட்சி மன்றத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவராகவும் பணி யாற்றி, தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஏழை எளிய-விவசாயத் தொழிலாளர்களுக்காகப் பாடுபட்டவர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி. மூத்த தலைவர் பி.சீனிவாஸ்ராவுடன் இணைந்து, சாணிப்பாலுக்கும் சவுக்கடிக்கும் முடிவு கட்டி, பண்ணை அடிமைத்தனத்தை ஒழித்த தோழர் பி.எஸ்.டி.-யின் 22-வது நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி, பாங்கல் கிரா மத்தில் அவரது நினைவிடத்திலும், கச்சனம் இராணி மகா லில் பி.எஸ்.டி. நினைவுப் பேரவைக் கூட்டமும் சி.பி.எம். தலைஞாயிறு ஒன்றியக்குழு சார்பில் திங்கட்கிழமை நடை பெற்றன.  நிகழ்ச்சிகளுக்கு சி.பி.எம். தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, தோழர் பி.எஸ்.டி. நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், சி.பி.எம். திருவாரூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகானந்தம், பி.எஸ்.டி. குடும்பத்தினர், இயக்கத் தோழர்கள், ஊர்ப் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர், கச்சனத்தில் ஏ.வேணு தலைமையில் தோழர் பி.எஸ்.டி. நினைவுப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நாகைமாலி சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.ராஜகுரு, டி.செல்லை யன், வி.தனபால், டி.செல்வி, கே.அலெக்சாண்டர், சி. பாப்பாத்தி, ஏ.ராஜா, டி.அருள்தாஸ் உள்ளிட்டோர் உரை யாற்றினர். வி.தொ.ச. மாநிலப் பொதுச்செயலாளர் வி. அமிர்தலிங்கம் நிறைவுரையாற்றினார். சி.பி.எம். பாங்கல் கிளைச் செயலாளர் வி.காசிநாதன் நன்றி கூறினார்.