tamilnadu

img

குமரியில் வாலிபர்-மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

குமரியில் வாலிபர்-மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், செப். 17- மயிலாடுதுறையில் வாலிபர் சங்க  நிர்வாகி வைரமுத்து சாதி ஆணவப்படு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க குமரி மாவட்ட தலைவர்  வி.ரெத்திஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.விஷ்ணு, மாவட்ட பொருளாளர் வி.விபின், துணை செயலாளர் ஒய்.ரெஜின், துணைத் தலைவர் எம்.காவ்யா, மாணவர்  சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சந்துரு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.