தொழிலாளர் வர்க்கம் எழுச்சிப் பேரணி : சிவந்தது கோவை
கோயம்புத்தூர், நவ. 9 - இந்திய தொழிற்சங்க மையம்( சிஐடியு) தமிழ்நாடு மாநில 16ஆவது மாநாடு கோயம்புத்தூரில் நவம்பர் 9 ஞாயிறன்று பல்லாயிரக்கணக்கான உழைப்பாளர்கள் பங்கேற்ற எழுச்சிமிகு பேரணியுடன் நிறைவு பெற்றது. நவம்பர் 6 முதல் நடைபெற்று வந்த இந்த மாநாட்டின் நிறைவு நாளான ஞாயி றன்று அகில இந்திய தலைவர் டாக்டர் ஹேமலதா நிறைவுரை நிகழ்த்தினார். முன்னதாக வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கைகள் மீதான பிரதிநிதிகளின் விவாதங்களுக்கு பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தொகுப்புரை வழங்கினார். புதிய மாநிலக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பேரணி மாநாட்டின் நிறைவாக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் வந்து கோவையில் சங்கமித்த உழைப் பாளர்களின் எழுச்சிமிகு பேரணி, ராம கிருஷ்ணா மருத்துவமனை அருகிலிருந்து துவங்கியது. செந்தொண்டர் அணிவகுப்பு, செங்குடைகள் ஏந்திய பெண் தோழர்களின் அணிவகுப்பு, திசைகளை அதிரச் செய்த கலைநிகழ்வுகள் என புறப்பட்ட பேரணி யின் முகப்பில் சிஐடியு தலைவர்கள் அ.சவுந்தர ராசன், ஜி.சுகுமாறன், எஸ்.கண்ணன், எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் சி.பத்மநாபன் உள்ளிட்ட வரவேற்புக்குழு நிர்வாகிகளும் அணிவகுக்க, செங்கொடி ஏந்தியவாறு தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகளை உணர்ச்சிமிகு முழக்கமாக எழுப்பியவாறு ஆயிரமாயிரமாய் அணிவகுத்தனர்; இக்காட்சிகள் சிவப்புக் கோவையை மேலும் சிவந்ததாக மாற்றி யது. நிறைவாக சிவானந்தா காலனியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன், பொதுச் செயலாளராக எஸ்.கண்ணன் தேர்வு
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநில 16 ஆவது மாநில மாநாடு கோவை யில் நடைபெற்றது. நிறைவு நாளான ஞாயிறன்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத்தலைவராக ஜி.சுகுமாறன், மாநிலப் பொதுச்செயலாளராக எஸ்.கண்ணன், பொருளாளராக எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில உதவி பொதுச்செயலாளர்களாக, வி.குமார், கே. திருச்செல்வன், கே.ஆறுமுகநயினார், இ.முத்துக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணைத் தலைவர்களாக அ.சவுந்தரராசன், மாலதி சிட்டிபாபு, கே.விஜயன், எம்.சந்திரன், பி.கருப்பையன், டிஉதயகுமார், ஏ.கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஜானகிராமன், எம்.மகாலட்சுமி, எஸ்.கே.மகேந்திரன், எம்.ஐடாஹெலன், ஆர்.ரசல், எஸ்.ரங்கராஜன், கே.தங்கமோகனன், சி.நாகராஜன், எம்.சிவாஜி, சி.ஜெயபால் மற்றும் மாநிலச் செயலாளர்களாக, கே.சி.கோபிகுமார், ரங்கராஜ், பி.என்.தேவா, எஸ். கிருஷ்ணமூர்த்தி, எம்.தனலட்சுமி, டி.குமார், ஏ.ஸ்ரீதர், எஸ்.தேவமணி, தி.ஜெய்சங்கர், பி.இந்திரா, அழகுநம்பி வெல்கின், இரா.லெனின், ஜெய்சீலன், டி.பழனிவேல், வி.குப்புசாமி, ஜெ.லூர்துரூபி, பகத்சிங்தாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
