டி.கே.ரங்கராஜனின் மூத்த சகோதரர் டி.கே.சுந்தரராஜன் மறைவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜனின் மூத்த சகோதரர் டி.கே.சுந்தரராஜன் (வயது 87) ஞாயிறன்று (நவ.9) ராஜகீழ்ப்பாக்கத்தில் காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), மாநிலக்குழு உறுப்பினர் வே.ராஜசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தொலைபேசியில் தொடர்புகொண்டு டி.கே.ரங்கராஜனிடம் இரங்கல் தெரிவித்தார்.
