tamilnadu

img

சர்க்கரை நோய் விழிப்புணர்வு பிரச்சாரம்

சர்க்கரை நோய் விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை.நவ.9- சர்க்கரை நோய் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3234, “சாயம்” (Sa’iyam) என்ற பெயரில் பிரச்சா ரத்தை உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டுத் தொடங்கியுள்ளது. ‘சாயம்’ என்றால் தன்ன டக்கம் அல்லது மிதமானது என்று பொருள். இந்த முயற்சிக்கு மாவட்ட ஆளுநர் ஆர்.டி.என். வினோத் சரயோகி மற்றும் மாதவ் நீரிழிவு மையத்தின் மூத்த ஆலோச கர் ஆர்.டி.என். டாக்டர். எம். சி. தீபக் ஆகி யோர் தலைமை தாங்குகின்றனர். சர்க்கரை நோயைத் தடுப்பதில் சமச் சீரான வாழ்க்கை முறையின் முக்கியத் துவத்தை ‘சாயம்’ வலியுறுத்துகிறது. இதன் முதல் நிகழ்வாக, ஞாயிறன்று (நவ, 9) பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1.8 கி.மீ. நடைப்பயணம் நடைபெற்றது. இதில் 650க்கும் மேற்பட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று, நீரிழிவு தடுப்பு குறித்த விழிப்பு ணர்வைப் பரப்பினர். யோகாசனம் மற்றும் சூர்ய நமஸ்காரம் பற்றிய செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது, இது உடல் உழைப்பு மற்றும் மன ஒருமைப் பாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. நடைப்பயணத்திற்குப் பிறகு, ஆரோக்கி யமான உணவுப் பழக்கங்களை வலியுறுத் தும் வகையில் பங்கேற்பாளர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கப்பட்டது. இந்த வாரம், சென்னை எம்.ஜி.ஆர். ரயில் நிலையம், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள் மற்றும் சென்னை விமான நிலையம் உட்பட முக்கிய இடங்களில் நீரிழிவு பரிசோதனை முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. போலியோவை ஒழிக்க முயற்சிக் கும்போது, நீரிழிவு நோயின் சவாலையும் நம்மால் நிச்சயம் வெல்ல முடியும் என்று ரோட்டரி சங்க நிர்வாகிகள்  நம்பிக்கை தெரி வித்தனர்.