tamilnadu

img

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மகளிர் தின மருத்துவ முகாம்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 
மகளிர் தின மருத்துவ முகாம்

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.கிருஷ்ணன் தலைமை வகித்தார், விழாவில் பங்கேற்ற திருவாரூர் முதன்மை மாவட்ட நீதிபதி பி. செல்வ முத்துக்குமாரி பல்கலைக்கழகத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில், புதுதில்லியில் நடந்த தேசிய மாணவர் படையின் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட ஜிஸ்னா டி.கே.அனைத்திந்திய தல் சைனிக் கேம்பில், கேரட் பட்டம் வாங்கிய அக்ஷயா, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் மூலமாக ரூ.1.5 கோடி ஆய்வு நிதியாக பெற்ற பேராசிரியர் விஜயலட்சுமி மற்றும் பேராசிரியர் விசாலட்சுமி, சங்கீதத்துறைக்கு பெரும் பங்காற்றிய பேராசிரியர் பிரேமலதா, நாட்டிய கலைஞர் வடிவழகி, பல்கலைக்கழக மருத்துவர் விஷ்ணுபிரியா மற்றும் பல்கலைக்கழக அலுவலர் சாந்தி ஆகியோருக்கு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விழாவில், பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் இரா. திருமுருகன், தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் சுலோச்சனா சேகர், பேராசிரியர் ரவிக்குமார், பேராசிரியர் சுந்தரவடிவு மற்றும் பல்கலைக்கழக மருத்துவர்கள் விஷ்ணு பிரியா, பிரேம் டேவிஸ் ஆகியோர் பங்கேற்றனர். பல்கலைக்கழக மருத்துவமனையில், சிறப்பு மருத்துவர்கள் ஆர்.புவனேஸ்வரி மற்றும் நஸ்ரின் பாத்திமா ஆகியோர் பங்கேற்ற பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள், கிராமப்புற பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.