tamilnadu

img

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி
ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பால்சாமி, மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் செல்லபிள்ளை, மாவட்டத் தலைவர் சரஸ்வதி, அரசு அனைத்துத் துறை சங்க ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆளவந்தார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். சங்க மாநில பொதுச்செயலாளர் மாயமலை கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், திமுக தேர்தல் வாக்குறுதி எண்- 313 இன் படி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியருக்கு 2025 - 26 பட்ஜெட்டில் குறைந்தபட்ச சிறப்பு பென்ஷன் ரூ.6 ஆயிரத்து 750 யை அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற பெண் ஊழியர்கள் தலையில் முக்காடு போட்டு, ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  முன்னதாக, மாவட்ட இணை செயலாளர் சின்னதுரை வரவேற்றார். இறுதியாக மாவட்டப் பொருளாளர் முத்துசாமி நன்றி கூறினார்.