tamilnadu

img

ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி  மாணவர்கள் பங்கேற்பு


லூரி மாணவர்கள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் (RAWE) திட்டத்தின் ஒரு பகுதியாக, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு, வருவாய் கோட்டாட்சியர் (பொ) ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.  வட்டாட்சியர்கள் தர்மேந்திரா (பட்டுக்கோட்டை), சுப்பிரமணியன் (பேராவூரணி), சுந்தரமூர்த்தி (திருவோணம்) ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு, தங்களது முக்கிய விவசாயப் பிரச்சனைகளை முன்வைத்துப் பேசினர். கூட்டத்தில் பங்கேற்ற வேளாண்மை, மின்சாரம், நகராட்சி, பொறியியல், வட்டார வளர்ச்சி, நீர்வளம், நிலம், சாலை மற்றும் பிற துறை அலுவலர்கள் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, தீர்வுகளை வழங்கினர்.