தமிழ் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை சொற்பொழிவு
தமிழ்ப் பல்கலைக்கழகம், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளியில் நிறுவப்பட்டுள்ள பேரா.ச. அகத்தியலிங்கனார், பேரா.செ.வை. சண்முகனார், பேரா. சிதம்பரநாதன் செட்டியார் மற்றும் திருமதி செண்பகம் சுப்பையா அறக்கட்டளைச் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு, ஆட்சிக்குழு உறுப்பினர்களுமான சி.அமுதா, மரு.பெ. பாரதஜோதி ஆகியோர் தலைமை வகித்துப் பேசினர். பல்கலைக்கழகப் பதிவாளர்(பொ.) கோ.பன்னீர்செல்வம் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினராக சீர்காழி எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்ப் பேராசிரியர் கோ.சதீஸ், “ஒப்பியல் நோக்கில் அகத்தியலிங்கனார், செ.வை. சண்முகனாரின் சங்க இலக்கியப் பங்களிப்புகள்” என்னும் தலைப்பில் ஆராய்ச்சி உரையை வழங்கினார். சிறந்த மாணவர்கள் பத்து நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிதம்பரநாதன் செட்டியாரின் அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் வழங்கப்படும் புத்தகப் பரிசினை வழங்கினார். முன்னதாக, மொழிப்புலத் தலைவரும் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி துறையின் தலைவருமான ச.கவிதா வரவேற்றார். இணைப் பேராசிரியர் இரா.வெங்கடேசன் நன்றி கூறினார். முனைவர் பட்ட ஆய்வாளர் து.தர்ஷினி தொகுத்து வழங்கினார்.