tamilnadu

img

சுவையான செய்திகளுடன் தொழிற்சங்க ஊழியரின் ‘தன் வரலாறு’ - வீ.பழனி

இப்படி ஒரு அருமையான வாழ்க்கை வரலாற்று நூலைத்  தந்தமைக்கு தமிழ் எழுத்துலகம் மோகன்தாசுக்கு பெரிதும் கடமைப் பட்டுள்ளது. இது ஒரு தன் வரலாறு, அதுவும் ஒரு  நடுத்தர வர்க்க தொழிற்சங்கத் தலை வரின் தன் வரலாறு என்று நீங்கள் நினைப்பீர்களானால் பெரிய தவறு செய்த வர்கள் ஆகிவிடுவீர்கள். எனது சொந்த அனுபவத்தில் இருந்து இதனைக் கூறுகிறேன். நூல் தலைப்பைப் பார்த்தவுடன் இப்படிப் பொருள் கொள்வது இயல்பான ஒன்று தான். ஆனால் பக்கங்களைத் திருப்பினால் தமிழகத்தில் தொலைபேசி ஊழியர் இயக்க வரலாற்றுச் செய்திகள் கொட்டிக் கிடக்கிறது. இதில் எந்த வியப் புக்கும் இடமில்லைதான். ஆனால் அந்த வரலாற்றுச் செய்திகள் கூட,பெரும் சுவை பட ஒரு நவீனம் போல எழுதப் பட்டுள்ளது. இவ்வளவு நாளும் இந்த எழுத்தாற்றலை மோகன்தாஸ் எங்கே ஒளித்து வைத்திருந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவருடைய சொந்த வாழ்க்கைச் செய்திகள், வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ள அவர் பிறந்து வளர்ந்த விளாத்திகுளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் எப்படி பலமாக இருந்தது; செயல்பட்டது என்பதைச் சொல்லி தொலைபேசி ஊழி யர் இயக்கத்தின் ஊடாகப் பயணித்து நிறைவாக பணி ஓய்வு பெற்ற பிறகு  கோவில்பட்டியில் தற்போது மேற்கொண்டு வரும் தீப்பெட்டி தொழி லாளர் சங்கப் பணிகள் வரை அனை த்தும் வானவில்லின் வர்ண ஜாலத்தைப் போல அந்தந்த அளவில் சேர்க்கப்பட்டு தரப்பட்டுள்ளது.

நூலைக் கையில் எடுத்து விட்டால்  கீழே வைக்க மனம் வராது என்பது தற்குறிப்பேற்றம் அல்ல. அறுசுவை உணவு இலையில் பரிமாறப்பட்டி ருந்தால் யார் தான் இடையில் எழுந்து போவார்கள்? தோழர் மோகன்தாசை தெரிந்த வர்கள் அறிவார்கள். அவர் அதிர்ந்து  பேசாதவர். அவர் எடுத்த வகுப்புகளை நான் கேட்டிருக்கிறேன் ஒரு ஆற் றொழுக்கான மொழிநடை. ஆனால் உரக்கப் பேசமாட்டார். அந்தப் பாக்கியை எல்லாம் சேர்த்து அவரது “தன் வரலாறு” குற்றாலம் மெயின் அருவியின் பேரி ரைச்சலை விட அதிகமாக இருக்கிறது. ஒரே ஒரு விவசாயி. அவருக்கு அர சியல் வகுப்பு எடுக்கிறார். இரவு நேரம் ஏற்பாடு செய்த தோழர் அவர் பாட்டுக்கு துண்டை விரித்து தூங்கிவிட்டார் .  வகுப்பு கேட்ட வரும் தூங்கி விடுகிறார். வகுப்பு ஆசிரியர் மோகன் தாஸ் வகுப்பு ஏற்பாடு செய்த தோழரிடம் சொல் கிறார். நாம் எல்லோரும் என்ன எதிர்பார்ப்போம். வகுப்பை அத்துடன் முடித்துக் கொள்வார்கள் என்று வகுப்பு ஏற்பாடு செய்த தோழர் வகுப்பு” மாண வரை “எழுப்பி முகத்தைக் கழுவி உட்கார வைத்து மறுபடியும் வகுப்பை தொடருங் கள் என்று சொல்லிவிட்டு அவர் மறு படியும் துண்டை விரித்து தூங்கி விட்டா ராம். இப்படி பல சுவையான செய்திகள் ஆங்காங்கே தெளிக்கப்பட்டுள்ளது.

விளாத்திகுளத்தில் மே தின விழா உண்மையில் கேள்விப்பட்டிராத செய்தி கள் - மே தினத்தை ஊரே கொண்டாடியிருக் கிறது. ஆங்காங்கே ஆட்ட பாட்டங்கள் என்று. கோவில் திருவிழா போன்று நடந்த செய்தி நமக்கு வியப்பூட்டுகிறது. நீலகிரி மலையிலும், ஈரோட்டிலும் நெல்லை மண்ணிலும் அவர் ஆற்றிய தொலைபேசி ஊழியர் சங்கப் பணி களும் தேச அளவில் ஒன்றுபடு; போராடு என்ற சி ஐ.டி.யு முழக்கத்தை தொலை பேசி அரங்கத்தில் செயல்படுத்த நடத்திய போராட்டல்களும் நூலில் கொட்டிக்கிடக் கிறது. தொழிற்சங்க அனுபவங்கள் மட்டு மல்லாது அதனோடு பின்னிப் பிணைந்த இடதுசாரி இயக்கச் செய்திகளும் ஏராளமாகத் தரப்பட்டுள்ளன. தோழர் மோகன்தாசின் மனைவியும் மருமகளும் கோவில்பட்டி வட்டாரத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னணி ஊழியர்கள். தோழர் மோகன்தாசும் ஊதியம் பெறாத முழு நேர ஊழியராகச் செயல்பட்டு வருகிறார். தொழிற்சங்க ஊழியர்களுக்கு பயன்படக்கூடிய, வழிகாட்டக் கூடிய ஒர்  அரிய படைப்பாக இந்த நூல் வெளி வந்துள்ளது.

எனது வாழ்க்கையும் போராட்டங்களும் (சுயசரிதை)
ஆசிரியர் : எஸ். மோகன்தாஸ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கம்: 400 / விலை : ரூ.400