districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருக்கடையூர் ஆட்டோ நிலைய மேற்கூரை அமைக்கும் பணி ஆய்வு

மயிலாடுதுறை, அக்.6 -  மயிலாடுதுறை மாவட்டம் திருக் கடையூர் கடைவீதியில் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முரு கன் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் அமைக்கப்பட்டு வரும் ஆட்டோ நிலைய மேற்கூரை அமைக்கும் பணியை  சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆய்வு செய்தார். திருக்கடையூர் கடைவீதியில் உள்ள  ஆட்டோ மற்றும் லோடு ஆட்டோ நிலை யம், மேற்கூரை இல்லாமல் திறந்தவெளியில் இருப்பதால் மழை மற்றும் வெயில் காலங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் மேற்கூரை யுடன் ஆட்டோ நிலையம் அமைத்து தர வேண்டுமென ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்று பூம்புகார் தொகுதி எம்எல்ஏ மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் மேற்கூரை யுடன் ஆட்டோ நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை நிவேதா முருகன் எம்எல்ஏ சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியின்  விவரம் குறித்து கேட்டறிந்து தேவை யான ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து திருக்கடையூரில் விவ சாய பண்ணை அருகே துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக மின்வாரிய துறையினரிடம் ஆலோசித் தார்.

கோஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: அரியலூருக்கு ரூ.30 லட்சம் விற்பனை இலக்கு

அரியலூர்/புதுக்கோட்டை, அக்.6 - காந்தி ஜெயந்தியையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கதர் மற்றும் கிராம பொருள்கள் அங்காடியில் தீபாவளி சிறப்பு  தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் பொ. ரத்தினசாமி தொடக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், நிக ழாண்டு தீபாவளியையொட்டி அரியலூ ருக்கு ரூ.30 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய கதர் துறையால் தயாரிக்கப்படும் அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர்  ரகங்கள், பாலியஸ்டர் ரகங்கள், உல்லன்  ரகங்கள் ஆகியவை வாடிக்கையா ளர்களைக் கவரும் வண்ணம் புதிய வடிவ மைப்பில் உள்ளன” என்றார். முன்னதாக அவர், அங்குள்ள மகாத்மா காந்தி உருவப்  படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  முக்கனி கோ-ஆப்டெக்சில்  ரூ.96 லட்சம் விற்பனை இலக்கு புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல்  விற்பனையை, மாவட்ட ஆட்சியர் மு. அருணா வியாழக்கிழமை  துவக்கி வைத்து, புதிய ரகங்களை பார்வையிட்டார். அப்போது, முக்கனி விற்பனை நிலை யத்தில் நிகழாண்டு தீபாவளிக்கு ரூ.96 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய் யப்பட்டு உள்ளது என்றார்.

கல்லெழுத்துக்கள் தமிழரின் தொன்மைக்குச் சான்று ஆராய்ச்சியாளர் பேரா.கண்ணதாசன் பேச்சு

கும்பகோணம், அக்.6- தமிழ்நாடு உயர்கல்வி மாமன்ற பாடத் திட்டத்தின்படி, தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அரசினர் கலை கல்லூரியில் தமிழ்த்துறை முதுகலைத் தமிழ் 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கற்றலிடைப் பயிற்சியின் 5 நாள் பயிற்சி நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியின் முதல் நாளில், தஞ்சா வூர் மன்னர் சரபோஜி கல்லூரி இணைப்  பேராசிரியரும் கல்வெட்டு ஆராய்ச்சியாள ருமான கண்ணதாசன் கல்வெட்டுகள் குறித்து  உரையாற்றினார்.   அப்போது அவர், மாணவர்களிடையே கல்வெட்டு படியெடுக்கும் முறையினை விவ ரித்தும் கல்லெழுத்துக் கலை கற்பது தமிழ ரின் தொன்மையைப் புரிந்து கொள்ள உதவும். இப்பயிலிடை பயிற்சியில் தமிழர் களின் வட்டெழுத்துக் கலை முதல் தற்கால  எழுத்துகள் வரை எவ்வாறு மாற்றம் பெற்று வந்துள்ளன என்று விளக்கினார்.  இரண்டாம் அமர்வில் முற்கால-பிற்காலச் சோழர்களின் கோயிற்கலைப் பாணி யைப் பட விளக்கத்துடன் எடுத்துக் காட்டி னார். மூன்றாம் அமர்வில் கல்லூரியில் அமைந்துள்ள கல்வெட்டு ஒன்றினை எவ்வாறு  படியெடுப்பது என்று செயல்முறை விளக்கம்  அளித்தார். பயிற்சிக்குத் தமிழ்த் துறைத் தலைவர் ரமேஷ் சாமியப்பா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மாதவி, தேர்வு நெறியா ளர் சுந்தரராஜன், வேதியல் துறைத்தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்து தெரி வித்தனர்.

வான்கோழி குஞ்சுகள்  குறைந்த விலைக்கு விற்பனை

புதுக்கோட்டை, அக்.6 - வான்கோழி வளர்க்க விரும்புபவர்களுக்கு புதுக் கோட்டை கால்நடை மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி  மையத்தில் குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது.  இதுகுறித்து மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர்  புவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு  கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத் தில் பண்டிகை காலத்திற்கு ஏற்ற வீரியமிக்க துரித  வளர்ச்சி மற்றும் சுவையான இறைச்சி தரும் வான்கோழி  குஞ்சுகள் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த குறைந்த  விலையில் விற்பனைக்கு உள்ளன.  பயன்பெற விரும்பும் விவசாயிகள் எங்கள் மையத்தில்  நேரடியாக வந்து குஞ்சு ஒன்றிற்கு  ரூ.75 என செலுத்தி பதிந்து, ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். பதிவு  செய்வதற்கு அக்டோபர் 13 கடைசித் தேதி. முதலில் பதிவு செய்யும் 30 நபர்களுக்கு உடனடியாக குஞ்சுகள் வழங் கப்படும் என தெரிவித்துள்ளார்.

நாட்டு நலப்பணி  திட்ட சிறப்பு முகாம்

மயிலாடுதுறை, அக்.6 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் ‘தூய்மையில் இளைஞர்களின் பங்கு’ என்ற தலைப்பில் செப்.28 முதல் அக்.4 வரை 7  நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமை யாசிரியர் பா.சித்ரா, திட்ட அலுவலர் அ.அசோக்ராஜ், உதவி எம்.தேவேந்திரன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.  சங்கரன்பந்தல், உத்திரங்குடி, ஓலக்குடி, பள்ளி வாசல்தெரு, ப.மு.தெரு, காளியம்மன், கன்னிக்கோயில் தெருக்கள், ஐஓபி தோட்டத்தெரு, பங்களாத்தெரு, விச லூர் சாலை ஆகிய பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில்  நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். முகாம் நிறைவு நாளில் கணினி பயன்பாடு கள் குறித்த பயிற்சி வகுப்பு, டெங்கு காய்ச்சல் மற்றும்  சிக்குன் குனியா விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள்  பங்கேற்றனர்.

ஹம்மது டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில்  முதலீடு செய்து ஏமாந்தோர் புகாரளிக்கலாம்

தஞ்சாவூர், அக்.6 -  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா அய்யம் பேட்டையை தலைமையிடமாக கொண்டு  இயங்கி வந்த  “ஹம்மது டிரான்ஸ்போர்ட்” நிறுவனம் பொதுமக்க ளிடமிருந்து முதலீடுகளை  பெற்றும், ஹம்மது டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதில்  வரும் லாபத் தொகையில் பங்கு தருவதாகக் கூறி,  பெறப்பட்ட தொகையை திருப்பி தராமலும் லாபத்தொ கையில் பங்கு தராமலும் ஏமாற்றியுள்ளன. இதுகுறித்து வரப்பெற்ற புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டு வழக்கானது தஞ்சாவூர் பொருளாதாரக் குற்றப் பிரிவில் புலன் விசாரணையில் இருக்கிறது.  இவ்வழக்கில் மேற்படி “ஹம்மது டிரான்ஸ்போர்ட்” நிறுவனத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதலீட் டாளர்கள் யாரேனும் முதலீடு செய்து, முதலீட்டு தொகை திருப்பி தரப்படாமல் மேற்படி நிறுவனத்தால் ஏமாற்றப் பட்டிருந்தால், அவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி  சாலை, 57பி, ராஜப்பா நகர் முதல் தெருவில் உள்ள பொரு ளாதாரக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் அலுவல கத்தில் நேரில் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி புகார்  கொடுக்கலாம்.  மேலும், பொதுமக்கள் இது போன்ற மோசடி நிறுவ னங்களில் முதலீடுகளை செய்து ஏமாற வேண்டாம் என தஞ்சாவூர் பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் ஆய்வா ளர் ஜெ.ரேவதி தெரிவித்துள்ளார்.

புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

திருச்சிராப்பள்ளி, அக்.6 - திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள செல்லம்  ஸ்டோர் அருகே உள்ள ஒரு வீட்டில் சிலர் புகையிலைப் பொருட்களை வைத்து விற்பனை செய்வதாக திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி கதிர்வேல், தலைமையிலான குழுவினர் அங்கு சென்று  பார்த்தபோது வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப் பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த னர். இவற்றின் மதிப்பு ரூ.25 ஆயிரம். இதுகுறித்து கதிர்வேல் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீ சார் வழக்குப் பதிந்து மேல சிந்தாமணியை சேர்ந்த மணி கண்ட பிரபு (27), ராஜா மணி (36) ஆகிய இரண்டு பேரை  கைது செய்தனர். மேலும் மனோகர் என்பவரை தேடி வரு கின்றனர்.

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழா

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழா பெரம்பலூர், அக்.6 - பெரம்பலூரில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க கௌரவ தலைவர் டாக்டர் கருணாகரன் தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ், தமுஎகச மாவட்ட தலைவர் அகவி, மாவட்ட பொருளாளர் வேல்முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜோதிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ராமர் வரவேற்றார். பாவேந்தர் இலக்கிய பேரவை செயலாளர் முகுந்தன், மாநில இலக்கிய அணி சமூக நீதி படைப்பாளர் சங்க பொறுப்பாளர் தாகீர் பாஷா, கலை இலக்கிய பெருமன்ற பொறுப்பாளர் சின்னசாமி, காக்கை சிறகினிலே ஆசிரியர் குழு தலைவர் எட்வின், வழக்கறிஞர் அணி ஸ்டாலின், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆறுமுகம், தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி செல்வமணியன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். எழுத்தாளர் பாட்டாளி சிறப்புரையாற்றினார். இதில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

திருச்சிராப்பள்ளி, அக்.4 - திருச்சிராப்பள்ளி மாவட்டம் பார்வைக் குறைபாடுடைய 6 வயது வரையிலான மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதை சரிசெய்திடும் வகையில் ஆரம்ப நிலைய பயிற்சி மையத்தின் மூலம் வேண்டிய பயிற்சிகள், உபகரணங்கள் மற்றும் சிறப்புக் கல்வி வழங்கிடும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தும் தொண்டு நிறுவனத்திற்கு சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய மானியம், வாடகை மானியம் மற்றும் இத்திட்டத்திற்கான விழிப்புணர்வு முகாம் நடத்துதல், விழிப்புணர்வு முகாம் மூலம் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை மதிப்பீடு செய்து வழிகாட்டி மற்றும் ஆலோசனை வழங்க ஆண்டுதோறும் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு விருப்பமுள்ள மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச்சட்டம் 2016-ன்கீழ் பதிவு பெற்ற தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்களது தொண்டு பதிவு சான்றிதழ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் குறித்த தொகுப்புகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், நீதிமன்ற வளாகம் பின்புறம், கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி - 620001 என்ற முகவரிக்கு 10.10.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில்  மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வந்த பயணி கைது

திருச்சிராப்பள்ளி, அக்.6 - திருச்சி விமான நிலை யத்திற்கு மலேசியாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்து  இறங்கிய பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப் போது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை அதிகாரி கள் சோதனை செய்த போது,  அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.  இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத் தியதில், அவர் போலி ஆவணங்களை வழங்கி பிறந்த இடம் மற்றும் தேதியை போலியாக கொ டுத்து, பாஸ்போர்ட் தயா ரித்து மலேசியாவில் இருந்து  திருச்சி வந்தது தெரிய வந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத் தியதில், அவர் இராம நாதபுரம் மாவட்டம் பரமக் குடி எமேனஸ்வரம் பகுதி யைச் சேர்ந்தவர் சிராஜுதீன் (49)என்பது தெரிய வந்தது.  சிராஜூதீன் ஏர்போர்ட்  போலீசில் ஒப்படைக்கப்பட் டார். அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

வடகிழக்குப் பருவமழை அரசு இயந்திரங்கள் தயார்

அறந்தாங்கி, அக்.6 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவில்  எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக ஜேசிபி இயந்திரம், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டை கள், ஜெனரேட்டர் மற்றும் சாலைப் பணியாளர்கள் தயாராக  உள்ளனரா என்பது குறித்து ஆவுடையார்கோவில் நெடுஞ்சா லைத் துறை உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறி யாளர் அலுவலகத்தில் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங், உதவி கோட்ட பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின்  திருவாரூர் மாவட்டச் செயலாளராக கே.பி.ஜோதிபாசு தேர்வு

திருவாரூர், அக்.6 - திருவாரூர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்க பேரவை சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. பேர வைக்கு மாவட்டத் தலைவர் கே.வேணுகோபால் தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்டத் தலை வர் எம்.கே.என்.அனிபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  மாநில துணைத் தலைவர் இ.டி.எஸ்.மூர்த்தி நிறைவுரையாற்றி புதிய நிர்வாகிகளை அறிவித்தார். மாவட்டத் தலைவராக டி. ரமேந்திரன், செயலாளராக கே.பி.ஜோதிபாசு, பொருளாளராக எஸ்.பிலிப்ராஜ் ஆகியோர் புதிய பொறுப்பாளராக தேர்வு செய்யப் பட்டனர். நலவாரிய பணப்பயன்கள், பதிவு, புதுப்பித்தல் காலதாமத மாவதை கண்டித்து அக்.22 அன்று நலவாரிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும். மாவட்டம் முழு வதும் 200-க்கும் மேற்பட்ட கட்டுமான கிளைகளை துவக்குவது  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாம்சங் தொழி லாளர்களுக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.