tamilnadu

டேனிஷ் கோட்டை புதுப்பிப்பு: சுற்றுலாத் துறை ஆணையர் ஆய்வு

மயிலாடுதுறை, அக்.6 - மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார்  சுற்றுலா வளாகம் ரூ.23 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருவதையும், தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை ரூ.4 கோடியே 35 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் புதுப் பிக்கப்பட்டு வருவதையும் சுற்றுலாத் துறை ஆணையர் சி.சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி முன்னிலையில் ஆய்வு செய்தார். பூம்புகார் சுற்றுலா வளாகம் மேம்ப டுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சுவர் கட்டுதல், வாகனம் நிறுத்துமிடம், கழிப் பறை, பொருள் வைப்பறை, நுழைவுச் சீட்டு அறை, தகவல் கூடம், புரோமி னேடு, எலக்டீரிக்கல் பணி, பாரம்பரிய விளக்கு வசதி, சிலப்பதிகார கலைக் கூடம் புனரமைப்பு பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பார்வையிட்ட சுற்றுலாத்துறை ஆணையர், பணி களின் தரத்தினை ஆய்வு செய்தார். சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகை யில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறி வுறுத்தினார். சுற்றுலா வளாகத்தில் மரக்கன்று வைக்கும் பணிகள் குறித்து  ஆய்வு மேற்கொண்ட அவர், பணி களை விரைவாக மேற்கொள்ள உத்தர விட்டார். தொடர்ந்து கலைக்கூடத்தை பார்வையிட்டு, பணிகளை சுற்றுலா பயணிகள் விரும்பும் வகையில் கலைநயத்துடன் மேற்கொள்ள வேண் டும். ஒப்பந்த காலக்கெடுவுக்குள் விரை வாக முடிக்க வேண்டும் என பொறி யாளருக்கு அறிவுறுத்தினார். பின்னர் தரங்கம்பாடியில் 36,410 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல்தளத்துடன் கூடிய டேனிஷ் கோட்டையானது ரூ.3.63 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தனர்.