tamilnadu

img

மேஜிக் நிபுணர் கோபிநாத் முதுக்காட் கன்னியாகுமரி - காஷ்மீர் விழிப்புணர்வு பயணம்

நாகர்கோவில், அக். 6- கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மாற்றுத்திறனாளிகள் மேம்பாட் டிற்காக நடத்தப்படும் விழிப்புணர்வு  பயணத்தின் ஒரு பகுதியாக குமார கோவில் தனியார் பல்கலைக்கழ கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மரக்கன்று கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம்  வட்டத்திற்குட்பட்ட குமாரகோவில் பகுதியில் அமைந்துள்ள நூருல் இஸ்லாம் உயர்கல்வி மைய கலைய ரங்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக் கான விழிப்புணர்வு நிகழ்ச்சி அக்.6 ஞாயிறன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தன்னம்பிக்கையுடன் தங்களது வாழ் வினை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கென கல்வி உதவித்தொகை,  திருமண உதவி திட்டங்கள். இலவச பேருந்து பயண அட்டை, மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள், செயற்கை கால்கள், தையல் இயந்தி ரங்கள். மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, காதொலி கருவி, திறன்பேசி,  இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட பல் வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டு வருகிறது. பிரபல மேஜிக் நிபுணர் கோபிநாத் முதுக்காடு தலைமையில் நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்பு ணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்வ தில் மட்டற்ற மகிழ்ச்சி. குறிப்பாக கோபி நாத் முத்துக்காடு நிகழ்த்தி காட்டிய நிகழ்வுகள் மற்றும் குறும்படங்கள் என்னை ஆச்சரிய பட வைத்தன. மாற்றுத்திறனாளிகள் மீது அவர் கொண்டுள்ள  அக்கறையினை மிகவும் பாராட்டுகின்றேன். இப்பயணமானது கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தொடங்கப்பட்டு இரண்டாவது  நிகழ் வாக குமாரகோவில் நூருல் இஸ்லாம்  உயர்கல்வி மையத்திலும் அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  மதுரை, திண்டுக்கல், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுமார் 41 நாட்கள் பயணம் மேற்கொண்டு  இறுதி யாக காஷ்மீர் சென்றடைய உள்ளது.  இப்பயணம் வெற்றி பெற மாற்றுத்திற னாளிகளின் வாழ்வில் ஏற்றம் பெற மனதார வாழ்த்துகிறேன் என்றார். நிகழ்ச்சியில் மேஜிக் நிபுணர் கோபி நாத் முதுக்காடு, நூருல் இஸ்லாம் உயர் கல்வி மையம் விரிவுரையாளர் திரு மால் வளவன், நூருல் இஸ்லாம் உயர்கல்வி  கல்வி குழுமம் பைசல்கான்,  பேராசிரியர்கள் மாணவ மாணவியர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.