tamilnadu

img

சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆர்.கே.தண்டியப்பன் மறைவு

சிவகங்கை, அக்.6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தோழர் ஆர்.கே. தண்டியப்பன் உடல்நலக் குறைவால் ஞாயிறன்று காலமானார். திருப்புவனத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்  உயிரிழந்தார். தோழர் தண்டியப்பன் திருப்பு வனம், மானாமதுரை, சிவகங்கை, இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடி, சாக்கோட்டை, எஸ்.புதூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் மக்கள் நலனுக்காக களப் பணியாற்றி வந்தார்.  வைகை ஆற்றில் கோகோ கோலா  நிறுவனம் தண்ணீர் எடுத்து விற்க முயன்றதை எதிர்த்து போராடினார். மேலும், வைகை ஆற்றில் மணல் கொள் ளையை தடுக்க தீவிர போராட்டங் களை நடத்தினார். பூவந்தியில் மணல்  கொள்ளையை தடுக்க ஐந்து நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியதன் விளை வாக 17 லாரிகள் பறிமுதல் செய்யப் பட்டன. விவசாயிகளின் நலனுக்காக குரல்  கொடுத்த தண்டியப்பன், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அவர்களின் பிரச்ச னைகளை முன்வைத்து தீர்வு காண உத வினார். கரும்பு விவசாயிகளின் உரிமை களுக்காகவும் போராடினார். தோழர் தண்டியப்பனின் மறைவு செய்தி அறிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கருப்புசாமி, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், பொன்னுத்தாய் உள்ளிட்ட பலர் திருப்புவனத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வீரபாண்டி, அய்யம்பாண்டி, முத்துராமலிங்க பூபதி, மோகன், ஆறு முகம், மானாமதுரை ஒன்றியச் செயலா ளர் ஆண்டி, சிவகங்கை ஒன்றியச் செய லாளர் உலகநாதன், காளையார்கோ வில் ஒன்றியச் செயலாளர் தென்னரசு, தேவகோட்டை ஒன்றியச் செயலாளர் பொன்னுச்சாமி, காரைக்குடி ஒன்றியச்  செயலாளர் அழகர்சாமி, திருப்பத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் முருகேசன், சிங்கம்புணரி ஒன்றியச் செயலாளர் காந்திமதி, திருப்புவனம் ஒன்றியச் செய லாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராள மானோர் அஞ்சலி செலுத்தி வருகின்ற னர். இன்று உடல் தானம் தனது இறுதி நேரத்திலும் சமூக நலனை முன்னிறுத்தி, தோழர் தண்டி யப்பன் தனது உடலை தானமாக வழங் கியுள்ளார். அவரது இறுதி நிகழ்ச்சி திங்களன்று காலை நடைபெறுகிறது. தோழர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.