மனித ரோபோக்களில் என்ன குறைபாடு?
ரோபோக்கள் உடற்பயிற்சி செய்வதையும் சலவை இயந்திரத்தில் துணிகளை போடுவதையும் பார்க்கும்போது ஒரு ரோபோ புரட்சியே உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்று நம்புவோம். வெளியிலிருந்து பார்க்கும் போது, செயற்கை நுண்ணறிவை மட்டும் செம்மைப்படுத்தி விட்டால் வாழ்வின் மெய்யான சூழலை இந்த இயந்திரங்கள் கையாண்டு விடும் என்று தோன்றும். ஆனால் ஆழமான பிரச்சனை இருப்பது இந்த துறையின் பெரும் நிறுவனங்க ளுக்கு தெரியும். மனித ரோபோவோ அல்லது விலங்குகளை போல இயங்கும் ரோபோவோ குறைந்த இணைப்பு களையே கொண்டிருப்பதால் நமது இயக்கத்திற் கும் அவைகளது இயக்கத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. நம்மைப் போன்ற நெகிழ்வான சாதுர்ய மான உடலமைப்பு அவற்றில் இல்லை. ஒரு மையத்திலிருந்து மென்பொருளால் கட்டுப்படுத்து வதே பிரதான பிரச்சனையாகும். எடுத்துக்காட்டாக ஒரு விளையாட்டு வீரர் ஒத்திசைவோடு இயங்கும் மூட்டுகள், நெகிழ்வான முதுகெலும்பு, சுருள்வில் போன்ற இணைப்பு தசைகள் இவற்றினால் திறனு டனும் பாந்தமாகவும் இயங்குகிறார். இதற்கு மாறாக ஒரு ரோபோவானது உலோகம் மற்றும் மோட்டர் களால் ஆன இறுகிய கட்டமைப்பும் வரையறுக்கப் பட்ட இயக்கம் கொண்ட மூட்டுகளாலும் ஆனது. இதனால் தனது எடையையும் இருப்பையும் மீறி இயங்குவதற்கு அதற்கு அதிக ஆற்றல் தேவை. எனவே அதன் பேட்டரிகள் விரைவாக தீர்ந்து விடும். ஒரு மனிதன் வேகமாக நடப்பதற்கு ஒரு வினா டிக்கு 310 வாட்ஸ் ஆற்றலை செல்வழிக்கிறான். ஆனால் ஒரு ரோபோ மெதுவாக நடப்பதற்கே வினா டிக்கு 500 வாட்ஸ் ஆற்றலை எடுத்துக் கொள்கிறது. இப்படி ஒரு எளிமையான செயலை செய்வதற்கே 45 சதவீதம் ஆற்றல் அதிகம் தேவைப்படும் இயந்திரம் திறனற்றது. எனவே இயந்திர சாதுர்யம்(mechanical intelligence) எனும் துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. திறனான உடல்வாகை, இயற்கை பல லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே செம்மைப்படுத்திவிட்டது. அதுவே இந்த ஆய்வு களின் அடிப்படை. ஒரு எடுத்துக்காட்டாக வறண்ட நிலைமைகளில் பைன் மரத்தின் காய்கள் திறந்து விதைகள் பரவுகின்றன. அதே சமயம் ஈரமான நிலைமைகளில் அது மூடிக்கொண்டு விதைகளை பாதுகாக்கிறது. இதற்கு மய்ய மூளையோ மோட்டாரோ தேவையில்லை. ஈரப்பதத்தின் அடிப்படையில் இயங்கும் இயந்திர எதிர்வினை. இன்னொரு உதாரணம் மனிதனின் கை தசை கள். தான் எடுக்கும் பொருளுக்கு ஏற்ப தகவ மைத்துக் கொள்ளும் சாதுர்யம் கொண்டது. அதே போல் விரல் நுனியானது எந்த ஒரு பரப்பிற்கும் தேவைப்படும் அளவிற்கு உராய்வை கொடுக்கும் உயவுத் தண்மை கொண்டது. இந்த இரண்டு தன்மைகளையும் ஒரு ரோபோவில் இணைக்க முடி யுமானால் இப்போது தேவைப்படும் ஆற்றலில் ஒரு சிறிதளவு மட்டுமே போதுமானது. அதாவது அதன் தோலே கணினியாக செயல்படும். இப்படிப் பட்ட ரோபோவை வடிவமைத்தால் அதன் செயற்கை நுண்ணறிவு மூளையானது அதற்கே உரித்தான உயர் நிலை செயல்களை செய்யும். இந்த அணுகுமுறையில் ஆற்றலை சேமிக்கும் சிறுத்தையின் இணைப்பு தசைகளை ஒத்த கால் களைக் கொண்ட ரோபோக்கள்; துல்லியம், வலு மற்றும் இறுக்கம் கொண்ட இணைப்புகளையும் அதிர்வுகளை தாங்கும் இணக்கத்தையும் கலந்த கலவை இணைப்புகள் ஆகியவை வடிவமைக்கப் படுகின்றன. லண்டன் சவுத் பேங்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயந்திர சாதுர்ய ஆய்வுக் குழுவின் (Mechanical Intelligence (MI))இயக்குனர் ஹமீத் ரஜாபி அவர்களின் கட்டுரை சயின்ஸ் அலர்ட்டி லிருந்து
