வெல்கம் 2026 தலைவர்கள் வாழ்த்து
எடப்பாடி பழனிச்சாமி வரக்கூடாது என்று நினைத்த 2026 திமுகவின் சதி யால் வந்துவிட்டது. அம்மாவின் தொண்டர்கள் அதிர்ஷ்டசாலிகள். 2021 தேர்தல் தோல்விக்குக் காரண மான இரட்டைத்தலைமை ஒழிந்து இப்போது ஒரே தலை மையின் கீழ் இயங்குகிறோம். தலைமை சொல்படி இயங்க சூளுரைப்போம். தலைமை சொன்னபடி 2024ல் தேர்வு செய்யப்பட்ட தொகுதிகளில் மட்டும் மூன்றாவது இடத்திறகு செல்ல முனைந்து நின்றோம். அம்மாவின் தொண்டர்கள் தலைமையின் வெற்றிக்கு உரமிட வேண்டும். உங்கள் சார்பில் தலைமைக்கு புத்தாண்டு வாழ்த்துகள் சொல்ல தில்லி செல்கிறேன். புத்தாண்டு வாழ்த்துகள். நயினார் நாகேந்திரன் நாலு கோடி, மன்னிக்கவும், எட்டு கோடி தமிழர் களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. கூட்ட நெரிசல் அதிகமாகி வந்ததால், கரூர் போன்ற அசம்பா விதம் நம்மால் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே என்னுடைய மக்கள் சந்திப்புப் பயணத்தைத் தொடங்கா மலேயே விட்டுவிட்டேன். நமக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்காமல் விட்டால், குன்றிருக்கும் இடமெ ல்லாம் குவாரி இருக்கும் என்ற நமது புதிய இயக்கத்தைத் தேர்தலுக்குப் பின் தொடங்குவோம் என்ற உறுதியுடன் கட்சியில் உள்ளவர்களுக்கும், மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். அன்புமணி புதிய ஆண்டுதான். வாய்தாக்கள் தொடரும், சொந்தங்களே . எம்.பி.யாக இருந்தபோது, அதற்காக தில்லி போவதாகக் காட்டிக் கொள்ள முடிந்தது. இப்போது வழக்கு விசாரணைக்காகப் போவது தெரிந்து போகிறது. 2026ல் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையெல்லாம் இல்லை . நீங்கள் வழக்கம் போலவே சாதியைச் சொல்லி வாக்குகளைக் கேளுங்கள். நமக்கு வேறு வழியில்லை . எல்லாவற்றிற்கு அறிக்கை விட்டுப் பழகி விட்டதால்,புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. புத்தாண்டு வாழ்த்து கள். விஜய் புத்தாண்டு வந்துவிட்டது. புதிய ஆண்டில் கம்பங் களைப் பார்த்தால் ஏறி விடுவது, வயர்களைக் கட் பண்ணுவது,ஆம்புலன்சைத் தாக்குவது போன்ற விஷயங்களை முடிந்த அளவுக்குத் தவிர்ப்போம். புதிய படம் வருகிறது. சாதனை வசூல் படைக்க வேண்டும். ஒருமுறை பார்த்தால் போதாது என்று உங்களு கு நான் சொல்லித் தர வேண்டியதில்லை .கொள்கை எதிரியை மறந்துவிட்டு, அரசியல் எதிரியைக் கவனிப்போம். கொள்கை எதிரியின் கோபத்துக்குஆளாகாமல் இருப்பது அவசியம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அண்ணாமலை அண்ணா .. புத்தாண்டு வாழ்த்துகள்ணா .. இப்போ இருக்குற சூழல்ல புதுக்கட்சிக்கு வாய்ப்பில்லீ ங்கணா .. ஆசை தான்.. 2024ல்ல கட்சி தோத்ததுரும்.. நாம ஜெயிச்சிருவோம்னு நெனச்சேன்.. கட்சியும் தோத்துச்சு.. நானும் தோத்துட்டேங்கண்ணா .. ஆனா கட்சி ஆட்சில இருக்கு.. நம்ம கட்சிப் பதவி போச்சு.. ஏதோ ஆயிரம், இரண்டாயிரம்னு, அதாங்கண்ணா .. கோடி.. கோடி.. அதப் பாதுகாக்குறதுதான் இப்போ முக்கியம்ணா.. புத்தாண்டு வாழ்த்துகள். சீமான் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். 2026ல் நமக்கு நிறைய கடப்பாரை கள் கி டைக்கும். நமது மன்னர் சார்லஸை 1987ல் சந்தித்து பிரட் ஆம்லெட் சாப்பிட்டது நினை க்கு வருகிறது. சுவை வேறுமாதிரியாக இருக்கிறதே என்று கேட்டபோது “இது யானை முட்டை ஆம்லெட்” என்று சொல்லிச் சிரித்தார். தம்பிகளே ,உங்களுக்கு ஒண்ணு தெரியுமா .. ஆம்லெட் எடுத்து சாப்புடுறதுக்கு முள் கரண்டி தரல... ஆளுக்கு ஒருகடப்பாரை தான்.. அனைவருக்கும் கடப்பாரை , சாரி, புத்தாண்டு வாழ்த்துகள். கற்பனை: கணேஷ்
