விஐடி வேந்தருக்கு நியூயார்க்கின் ஆர்ஐடி கவுரவ டாக்டர் பட்டம்
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் தொழில்நுட்ப நிறுவனம் மே 9 அன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்தியா முழுவதும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மேலாண்மை கல்வியை விரிவுபடுத்துவதில் விசுவநாதனின் தொலைநோக்கு மற்றும் தலைமைத் துவத்திற்காகவும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு ஆதரவளிப்பதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பிற்காகவும் ரோசெஸ்டர் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் இந்த பட்டத்தை வழங்கியது. தலைமை அதிகாரி டாக்டர் டேவிட் முன்சன், கல்வி விவகாரங்களுக்கான பேராசிரி யர் மற்றும் மூத்த துணைத் தலைவர் டாக்டர் பிரபு டேவிட் ஆகியோர் இந்த பட்டத்தை வழங்கினர். இந்த விழாவில், விஐடியின் துணைத் தலைவர்கள் சங்கர் விசுவ நாதன், முனைவர் சேகர் விசுவநாதன், துணை வேந்தர் முனைவர். காஞ்சனா பாஸ்கரன் மற்றும் சர்வதேச உறவுகள் இயக்குநர் முனைவர் ஆர். சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியமைக்காக விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் நன்றி தெரிவித்தார். இந்த அங்கீகாரம், அமெரிக்க பல்கலைக் கழகங்களால் மூன்றாவது முறையாக ஒரு இந்தியருக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிட த்தக்கதாகும். இதற்கு முன்பு, 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைக்கழகம், 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிங்காம்டன் பல்கலைக்கழகமும் விஸ்வநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. மேலும், இந்த ஆண்டில், கொல்கத்தாவின் செயின்ட் சேவியர்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.