tamilnadu

img

வைரஸ் தாக்குதல் எச்சரிக்கை!

வைரஸ் தாக்குதல் எச்சரிக்கை!

சட்டவிரோத இணையதளங்களில் இருந்து திரைப்படங்களை பதிவிறக்கம்  செய்பவர்களின் விண்டோஸ் கணினி அல்லது மடிக்கணினிகள், புதிய வகை வைரஸ் தாக்கு தல்களுக்கு உள்ளாகுவதாக கூகுளின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான மாண்டியண்ட் (Mandiant) எச்சரித்துள்ளது. பீக்லைட் (Peaklight) எனும் புதிய  வகை மால்வேர், சட்டவிரோத இணையதளங்க ளில் இருந்து திரைப்படங்களைப் பதிவிறக்கும் செய்யும் போது, ZIP Folder-களில் ஒரு Shortcut files (LNKs) ஆக  கணினியின் Memory-இல் சேமிக்கப்படுகிறது. நாம் பயன்படுத்தி வரும் ஆண்டிவைரஸ் மென்பொருள்களால் கூட இந்த மால்வேர்களை கண்டறிய முடியாது. இந்த  மால்வேர், லும்மா ஸ்டீலர் (Lumma Stealer), ஹைஜாக்  லோடர் (Hijack Loader) மற்றும் கிரிப்ட்பாட் (Crypt Bot) போன்ற கூடுதலாக தீங்கு விளைவிக்கும் ப்ரோகிராம்கள்  மூலம் செயல்படும் PowerShell ஸ்கிரிப்ட்டை பயன் படுத்துகிறது. இந்த மால்வேர் மூலம் ஹேக்கர்கள் உங்கள் கணினிகளை தங்கள் வசப்படுத்தி தரவுகளை திருடப்படும் அபாயங்கள் உள்ளதாக மாண்டியண்ட் நிறுவனம்  எச்சரித்துள்ளது.

நோட்புக்எல்எம்-இல்  புதிய வசதி!

கூகுள் நிறுவனத்தின் ஏஐ அம்சங்களில் ஒன்றான நோட்புக்எல்எம் (NotebookLM) இல்,  தற்போது யூடியூப் வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள்  மூலம் சுருக்கமான உரையை பெறும் வசதி வழங்கப் பட்டுள்ளது.  செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட நோட்புக் எல்எம், நாம் பதிவேற்றம் செய்யும் Google documents, பி.டி.எஃப் கோப்புகள் (PDF Files), டெக்ஸ்ட் வடிவி லான கோப்புகள், இணையப்பக்கங்கள் (Webpages) ஆகியவற்றிலிருந்து குறிப்புகளை எடுத்து பய னர்களுக்கு டெக்ஸ்ட் வடிவில் சுருக்கமான உரை யாக வழங்கி வருகிறது. இந்த அம்சத்தில் தற்போது  யூடியூப் வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்து அதன் உரையை பெறும் வசதி  வழங்கப்பட்டுள்ளது.  இந்த அம்சம் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளில்  வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தி  வந்த நோட்புக்எல்எம், தற்போது பெரும்பாலானோரைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அம்சத்தை https://notebooklm.google.com/ என்ற லிங்கில் பயன் படுத்தலாம்.

வாட்ஸ்அப்பில் கேமரா பில்டர்கள் அறிமுகம்!

வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.24.20.20இல், கேமராவில் பில்டர்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளதாக WABetaInfo தெரிவித்துள்ளது. WABetaInfo வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வாட்ஸ்அப் கேமராவில் இதற்கென ஒரு Filter Button சேர்க்கப் பட்டுள்ளது. புகைப்படம் அல்லது வீடியோக்களை எடுத்து விட்டு இந்த Filter button-ஐ கிளிக் செய்தால் அதனை மெருகேற்றி காட்டுகிறது. இந்த பில்டர்கள் முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்கி, சருமத்தை மென்மையாகவும், பொலிவுடனும் காட்டுகிறது.  முன்னதாக வாட்ஸ்அப் வீடியோ காலில், Background-ஐ மாற்றும் வசதியும், வெளிச்சத்தை மேம்படுத்தும் அம்சமும் கேமராவில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.