districts

img

புதுக்கோட்டையில் மாணவர் சங்கம் பேரணி

புதுக்கோட்டை, செப்.27 - கல்விக்கான பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் எழுச்சிப் பேரணி-பொதுக் கூட்டம் புதுக்கோட்டையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் புதுக் கோட்டை மாவட்ட சிறப்பு பேரவை புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடை பெறுகிறது. அதனையொட்டி வெள்ளிக் கிழமை மாணவர்களின் எழுச்சிப்  பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடங்கிய பேரணியை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் எம்.சின்னதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சங்கத்தின்  மாநிலச் செயலாளர் கோ.அரவிந்த சாமி, மாவட்டச் செயலாளர் சா. ஜனார்த்தனன், மாநில செயற்குழு உறுப்பினர் ரெ.கார்திகாதேவி, மாவட்டத் தலைவர் அ.சந்தோஷ் குமார், வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் ரா.மகாதீர், மாணவர் சங்க நகரச் செயலாளர் கே.சந்துரு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் பங்கேற்றனர். பேரணியில், தமிழ்நாட்டில் மீண்டும்  மாணவர் பேரவையைத் தொடங்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வி காவிமயமாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முழக்கங்களாக எழுப்பினர். புதுக்கோட்டை நகரின் முக்கிய  வீதிகள் வழியாக பேரணியாக வந்து,  பொதுக்கூட்டம் நடைபெறும் சின்னப்பா பூங்காவில் நிறைவடைந்தது.  அங்கு மாவட்டத் தலைவர் அ.சந்தோஷ் குமார் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரை யாற்றினர்.