districts

திருச்சி முக்கிய செய்திகள்

மீன் விற்பனையாளர்களுக்கு  கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும்

மயிலாடுதுறை, செப்.27 - மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசலில் மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் விற்ப னையாளர்கள் சங்கத்தின் மயிலாடு துறை மாவட்ட பேரவை சிவிஆர். ஜீவா னந்தம் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் மாநில பொதுச் செயலா ளர் எஸ்.அந்தோணி, சிஐடியு மாவட்டச்  செயலாளர்  ப.மாரியப்பன், மாவட்டத்  தலைவர் கலைச்செல்வன் ஆகியோர்  சிறப்புரையாற்றினர்.  திருமுல்லை வாசல் கடல் பகுதியில் மீன்பிடி துறை முகம் அமைத்து தர வேண்டும். மீன்பிடி  தடைக் காலம் நிவாரணத்தை 21000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மழைக்கால நிவாரணமாக 10  ஆயிரம் வழங்க வேண்டும். மீன் விற்ப னையாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும். நலவாரியத்தில் சேர்க்க வேண்டும்.  மீன்பிடி தொழிலில் ஈடுபடக் கூடிய  அனைவரையும் கூட்டுறவுச் சங்கத்தில் சேர்த்து அவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். கடலோரப் பகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையில் மாவட்டத் தலைவராக  எம்.நாகவள்ளி, செயலாளராக சிவிஆர் ஜீவானந்தம், பொருளாளராக ஆர்.தீபா, துணைத் தலைவர்களாக வீ.மறைமலை, எஸ்.அம்மையப்பன், ஆர்.ஜெயமாலா, துணைச் செயலா ளர்களாக பி.உதயக்குமார், கே.முனு சாமி, எம்.மகேஸ்வரி ஆகியோரும், எம். வீரமணி வி.கே.வள்ளல், மு.ப. மோகன்தாஸ், ரஜினி, சுந்தர், ஜோதி  ஆகியோர் அடங்கிய 15 பேர் கொண்ட  புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப் பட்டது.

கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை, செப்.27 - புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம்  ராயவரம் ஆணைவாரி யைச் சேர்ந்த காந்தி  என்பவரின் குடும்பத்தின ருக்கும், பூசையா என்ப வரின் குடும்பத்துக்கும் இடையே, அந்தப் பகுதி யிலுள்ள அடிச்சி அம்மன் கோவில் கட்டுவதில் முன் விரோதமும் தகராறும் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த  2019 மார்ச் 17 அன்று காந்தியின் வீட்டுக்குச் சென்ற பூசையா குடும்பத் தினர், அங்கு வீட்டு வாச லில் அமர்ந்திருந்த காந்தி,  ராமையா மற்றும் இவர்க ளின் உறவினர் அன்பில் முத்து (46) ஆகியோரை அரிவாள், உருட்டுக்கட்டை ஆகியவற்றைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். இரு நாட்கள் கழித்து சிகிச்சைப் பலனின்றி அன்பில் முத்து  இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக  வழக்குப் பதிவு செய்த அரி மளம் போலீசார் வழக்குப் பதிந்து ஆணைவாரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி யன் மகன்கள் பூசையா (47), சக்திவேல் (42), ஆறு முகம் (40), பூசையா மனைவி சித்ரா (42), அழகு  மனைவி பாண்டி உஷா (29), கடியாப்பட்டி சுகுமாறன்  மகன் யுவராஜன் (27). சுப்பிரமணியனின் மனைவி  வசந்தா (64) ஆகிய 7  பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக் கோட்டை மாவட்ட கூடுதல்  நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. அரசு வழக்குரைஞர் மு. செந்தில் குமார் ஆஜராகி வாதாடி னார். வழக்கு விசாரணை யின் முடிவில், நீதிபதி ஏ.கே.  பாபுலால் வெள்ளிக் கிழமை தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் குற்றங்களும் நிரூ பிக்கப்பட்டதால், அனைவ ருக்கும் ஆயுள் தண்டனை யும், தலா ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

திருவெறும்பூர் பகுதி ஏரி, குளங்களை நிரப்பி  விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டுகோள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேச்சு

திருச்சிராப்பள்ளி, செப்.27 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை கேட்கும் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி தலைமை வகித்தார்.  கூட்டத்தில் அகில இந்திய விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நடராஜன், மாவட்டத் தலைவர் சிதம்பரம்,  அரசங்குடி ஒன்றியத் தலைவர் கணே சன் மற்றும் நிர்வாகிகள் உள்பட விவசா யிகள் பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நடராஜன் பேசுகையில், “திருவெறும்பூர் வட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் சுமார் 5000 ஏக்கரில் ஒரு போக சாகுபடி செய்து வருகிறார்கள். சென்ற ஆண்டு பருவ மழை இல்லாததால் விவசாயம் செய்ய  முடியாத நிலை ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் கர்நாடகாவில் பருவமழை பெய்து மேட்டூர் அணை நிறைந்து, கூடுதல் தண்ணீர் வந்து கொள்ளிடம் ஆறு மூலம் கடலுக்குச் சென்றுள்ளது.  நாற்றாங்காலை பாதுகாக்க... அதன் ஒரு பகுதியாக கிளை ஆறு களான உய்யகொண்டான், கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து ஏரி களுக்கு வந்தது. விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்தார்கள். வந்த தண்ணீரை பயன் படுத்தி நாற்று விடும் பணிகளை துவங்கி வருகின்றனர். ஏரிகளில் இருந்த  தண்ணீர் குறைந்து வருவதால் நாற்றங் காலை பாதுகாக்க முடியுமா என்ற பயம்  விவசாயிகளுக்கு ஏற்பட்டது. மேலும் கிளி வாய்க்காலை வடிகால்  என சொல்கின்றனர். இந்த வாய்க்கால்  மூலம் 4700 ஏக்கர் சாகுபடி செய்யப்படு கிறது. இந்த வாய்க்காலில் 15 நாட்க ளுக்கு மட்டுமே தண்ணீர் வந்தது. இது  நாற்று போடுவதற்கு மட்டுமே போது மானதாக உள்ளது. எனவே இந்த  ஆண்டு விவசாயத்தை பாதுகாத்திட வும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் மேற்படி பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களை ஆய்வு செய்து தண்ணீரை நிரப்ப வேண்டும்” என்றார். பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்தார். 4 கி.மீ. சுற்றும் அவலம் இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மணப்பாறை வட்டம் கண்ணுடையான் பட்டி கிளைச் செயலாளர் சுப்பிரமணி கொடுத்த மனு வில், “மணப்பாறை பாரதியார் நகரில் குடியிருந்து வரும் சிதம்பரம் என்பவர்  குமரப்பட்டி பொதுமக்கள் பூர்வீகமாக  சென்று வந்த பாதையை கம்பி வேலி  அமைத்து அடைத்து வைத்துள்ளார்.  மருத்துவமனைக்கு வரக்கூடியவர் கள், பள்ளிக்கூடம் செல்லும் மாணவர் கள், அன்றாட பணிக்கு செல்லும் பொது மக்கள் சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றி வர  வேண்டியுள்ளது.  அவர் அமைத்துள்ள கம்பி வேலி சுமார் 15 ஏக்கர் பரப்பளவு இருக்கும். அவர் 200 அடி பாதையை விட்டுக் கொடுத்தால், பொதுமக்கள் எந்த சிர மங்களும் இல்லாமல் சென்று வரலாம்.  எனவே தாங்கள் தலையிட்டு பொது மக்கள் சென்று வந்த 200 அடி பாதையை கையகப்படுத்தி பொதுமக்க ளுக்கு சாலை அமைத்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

டிரோன் மூலம் பயிர்களுக்கு  மருந்து தெளித்தல் செயல்விளக்கம்

பெரம்பலூர், செப்.27 - விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளித்தல் குறித்த செயல்விளக்கம், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்  தலைமையில் வெள்ளிக்கிழமை விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.  மேலும், வேளாண்மைத்துறை மூலம் ரூ.4,64,591/- மதிப்பிலான நுண்ணீர் பாசன திட்டத்தில் தெளிப்பு நீர் பாசனக்கருவி, மழைத் தூவுவான் வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தில் ரொட்டவேட்டர், எண்ணெய்வித்து இயக்கத்தில் வேம்பு பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட வற்றை ரூ.2,66,589/- அரசு மானிய உதவியுடன் விவ சாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர்  வழங்கினார்.  தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் நிழல்வலைக்கூடம், நீர் சேமிப்பு அமைப்பு, பேக்ஹவுஸ் மற்றும் பந்தல் அமைப்பு ஆகியவை  ரூ.7,80,000 மானியத்திலும், வேளாண் பொறியியல்துறை மூலம் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் ரூ.6,00,534  மதிப்பிலான பவர்வீடர்கள் ரூ.3,04,767/- அரசு மானிய  உதவியில் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்  வழங்கினார்.

தேசிய யோகா போட்டி சாம்பியன் கோப்பை வென்ற நன்னிலம் மாஸ்டர் ஆனந்த்

திருவாரூர், செப்.27 -  தேசிய அளவிலான யோகாசன ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி புதுவை மாநிலம் காரைக்காலில் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற நன்னிலம் பகுதி யோகா மாஸ்டர் ஆனந்துக்கு சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்பட்டது. நேஷனல் வி.ஆர்.எஸ் ராமதேவ யோகா அசோசியேசன் மற்றும் இன்டர்நேஷனல் தற்காப்பு கலைகள் அகாடமி இணைந்து நடத்திய இப்போட்டியில் புதுவை, கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 300-க்கும்  மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில்  நடைபெற்ற போட்டிகளில், பல பரிசுகளை தமிழக மாண வர்கள் பெற்றுள்ளனர். இந்த மாணவர்களின் பயிற்சியாளர் திருவாரூர் மாவட்டம்  நன்னிலம் பகுதியைச் சார்ந்த யோகா மாஸ்டர் ஆனந்த் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றார். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் நன்னி லம் கிளை உறுப்பினர் ஆவார். நிகழ்வில் சட்டமன்ற உறுப்பி னர்கள் ஏ.எம்.எச் நாஜிம், சந்திரபிரியங்கா ஆகியோர் பங்கேற் றனர். 

போலிச் சான்று வழங்கிய விவகாரம் முன்னாள் எஸ்எஸ்ஐ உள்பட இருவர் கைது

புதுக்கோட்டை, செப். 27 - நிலப்பத்திரம் காணாமல் போன புகாரில், அதனைக் கண்டறிய முடியவில்லை என்ற காவல் துறையின் சான்றினை  போலியாகத் தயாரித்து கொடுத்ததாக ஓய்வுபெற்ற சிறப்புக்  காவல் உதவி ஆய்வாளர் உள்பட இருவரை திருக்கோ கர்ணம் போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை நகரிலுள்ள ஓர் இடத்துக்கான பத்திரம் காணாமல் போனதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், முகமது காசிம் மற்றும் மூக்கையா ஆகியோரை புதன்கிழமை போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, ஏற்கெனவே காவல் நிலையத்தில் இருந்து கொடுக்கப்பட்ட ஆவணமான கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழ் போலி யானது எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அப்போது சிறப்பு உதவி ஆய்வா ளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கீழ 5ஆம் வீதியைச்  சேர்ந்த பாலசுப்பிரமணியன் (60) மற்றும் மேலமுத்துடை யான்பட்டியைச் சேர்ந்த மூக்கையா (49) ஆகிய இருவ ரையும் திருக்கோர்ணம் போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர். உதவி ஆய்வாளர் பெயரில் கையெழுத்திட்டு வழங்கப் பட்ட இந்தப் போலிச் சான்றிதழுக்காக எஸ்எஸ்ஐ பாலசுப்பிர மணியன், ரூ. 2 லட்சம் பணம் வாங்கிக் கொண்டதும் விசா ரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவ ரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

அரசுப் பள்ளிக்கு தளவாடப்  பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ

பாபநாசம், செப்.27 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே சுவாமிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பாப நாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3.62 லட்சத்தில் மாணவர்களுக்கு மேசை, நாற்காலி உள்ளிட்டப் பொருட்கள்,  தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் மோகன கிருஷ்ணன் தலைமை வகித்தார். பாபநாசம் எம்.எல்.ஏ ஜவா ஹிருல்லா, மாணவர்களுக்கு மேசை, நாற்காலி மற்றும் அரசின் விலையில்லா சைக்கிள் ஆகியவற்றை வழங்கிப் பேசி னார். மேலும் இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் நல்லாசிரி யர் விருது பெற்ற பள்ளி தமிழாசிரியர் செந்தில்குமாரை பாராட்டினார்.

தலைக்கவசம் அணிந்து  வாகனம் ஓட்டுபவர்களுக்கு பரிசு பெரம்பலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்

பெரம்பலூர், செப்.27 - பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை  நடந்தது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சட்டம் - ஒழுங்கு ஏற்பட வாய்ப்புள்ள சம்பவங்கள் குறித்தும், அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆய்வு செய்தார். இரு சமூகத்தினரிடையே பல்வேறு சூழல்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அமைதி குழு அமைத்து, சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக தீர்வு காண வேண்டும் என்று வருவாய்த் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் அறிவுறுத்தினார்.  பெரும்பாலான விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகளை வழங்க வேண்டும். தலைக்கவசம் அணியாதவர்களுக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும் மாநில நெடுஞ்சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். பல இடங்களில் வேகத்தடைகள் இருப்பதே தெரியாத வகையில் உள்ளது. ஏற்கனவே வேகத்தடைகள் இருக்கும் இடங்களில் அவற்றில் வெள்ளை வண்ணம் பூசவும், விபத்து நடக்க வாய்ப்புள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில் பிரதிபலிப்பான்கள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.