tamilnadu

img

முக்கிய முதலாளித்துவ பிரிவை எதிர்க்கும் ஜனநாயக அணுகுமுறை

முக்கிய முதலாளித்துவ பிரிவை எதிர்க்கும் ஜனநாயக அணுகுமுறை கொண்ட முற்போக்கு கருத்தியல் கொண்ட முதலாளித்துவ பிரிவைக் கூட தன் தலைமையின் கீழ் தொழிலாளி வர்க்க புரட்சிகரக் கட்சி கொண்டு வருகிறது. லெனினின் பார்வையில் பாட்டாளி வர்க்க கட்சி தனது சொந்த தேசம் முழுமைக்கும், மனித குலம் முழுமைக்குமான ஆளும் கட்சியாக பரிணமிக்க வேண்டும். அதனால்தான் தொழிற்சங்க அதிகார மனோபாவம் கொண்ட; குறுகிய மனப்பான்மை கொண்ட அணுகுமுறையை லெனின் எதிர்த்து தோற்கடித்தார். “அனைத்து மக்களின் களநாயகராக” தொழிலாளி வர்க்க கட்சி இருக்க வேண்டும் என்பதற்காக அவர் கடும் போராட்டம் நடத்தினார்.