games

img

விளையாட்டு...

கான்பூர் டெஸ்ட்  மழையால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தம்

வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் என 2  வித மான போட்டிகளைக் கொண்ட தொட ரில் பங்கேற்க இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ் வான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட்  தொடரின் முதல் ஆட்டம் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நடைபெற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  இந்நிலையில், 2ஆவது மற்றும்  கடைசி டெஸ்ட் போட்டி வெள்ளியன்று உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தொடங்கியது. மோசமான வானிலை காரணமாக (சாரல் மழை) 2ஆவது டெஸ்ட் போட்டி மிக தாமதமாக தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணி நிதான ஆட்டத்துடன் ரன் குவித்த நிலையில், உணவு இடைவேளைக்குப் பிறகு பலத்த மழை பெய்ய முதல் நாள் ஆட்டம் பாதி யிலேயே கைவிடப்பட்டது.  முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 35 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து இருந்தது. மொமினுல் (40), ரஹிம் (6) ஆகியோர் களத்தில் இருந்த நிலையில், இந்திய அணி தரப்பில் அதிக பட்சமாக ஆகாஷ் தீப் 2 விக்கெட்டு களை வீழ்த்தினார்.

டெஸ்ட் போட்டியின் ஒரு நாளுக்கான அட்டவணை

விளையாட்டு ரசிகர்களுக்கு 5 நாட்கள் நடை பெறும் டெஸ்ட் போட்டியை பற்றி பெரும் பாலான தகவல்கள் தெரியும். ஆனால் ஒரு நாளுக்கான அட்டவணை தொடர்பாக அநேகமாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனைப் பற்றி பார்க்கலாம்: காலை 9:30 மணிக்கு தொடங்கும் டெஸ்ட் போட்டி 10:30 வரை நடைபெறும்.  அதன்பின்பு தண்ணீர் இடைவேளை வழங்கப்படும். 10:30 முதல் 12:30 வரை முதல் சீசன் பிரிவு ஆட்டம் நடை பெறும் நிலையில், 12:30 மணிக்கு மதிய இடை வேளை வழங்கப்படும். மீண்டும் 1:10 மணிக்கு இரண்டாவது சீசன் ஆட்டம் தொடங்கும். 3:10  தேனீர் இடைவேளை அளிக்கப்படும். 3:30 மணிக்கு மூன்றாவது சீசன் ஆட்டம் தொடங்கி, 5:30 மணிக்கு முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும். 5:30 மணிக்கு 90 ஓவர்கள் (ஒருநாளைக்கு 90 ஓவர்கள்) வீசவில்லை என்றால், போதியளவு வெளிச்சம் இருந்தால் கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்படும். இதுதான் டெஸ்ட் போட்டியின் ஒருநாள் அட்டவணை ஆகும்.

‘உழைப்பின் கறைக்கு கிடைத்த பரிசு’ நிலக்கரி தொழிலாளிக்கு இலவச டிக்கெட்,  பாஸ் வழங்கிய வைல்ட்கேட்ஸ் அணி

அமெரிக்காவில் முதன்மையான லீக் போட்டியாக இருப்பது என்பிஏ என அழைக்கப்படும் தேசிய கூடைப்பந்து  அசோசியேஷன் கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டியாகும். இந்த தொடர் அமெரிக்காவில் மட்டு மின்றி உலகளவிலும் பிரபலமாக உள்ள நிலையில், கடந்த மாதம் நிகழ்ந்த ஒரே ஒரு சம்பவம் இன்று வரை சமூகவலைத் தளங்களில் டாப் ஆர்டரில் வலம் வரு கிறது.  கென்டக்கி பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் தனது மகனின் நீண்ட நாள் ஆசை யான வைல்ட்கேட்ஸ் அணியின் ஆட்டத்தை காண லெக்சிங்டனில் உள்ள ரூப் அரினா அரங்கிற்கு அழைத்துச்சென்றார். வீட்டிற்கு சென்று  குளித்துவிட்டுச் செல்ல  நேர மில்லாததால் வேலை பார்த்த கை யோடு தனது மகனோடு ரூப் அரினா  அரங்கிற்குள் நுழைந்தார். உடல் மற்றும் உடையில் நிலக்கரி கழிவுகளு டன் இருந்த தொழிலாளியை வீரர்கள்,  ரசிகர்கள் என அனைவரும் ஆச்சர்யத்து டன் பார்த்தனர்.  மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை கருத்தில் கொள்ளாமல் தனது மகனின் ஆசையை நிறைவேற்ற வேலைப் பார்த்த கையோடு மைதானத் திற்கு வந்த நிலக்கரி தொழிலாளி மற்றும் அவரது மகனுக்கு கென்டக்கி பல்கலைக்கழக வைல்ட்கேட்ஸ் ஆண்கள் கூடைப்பந்து அணி வாழ்நாள் இலவச டிக்கெட்டுக்கான பாஸ் (நுழைவுச் சீட்டை)  வழங்கி கவுரவித்தது. “உழைப்பின் கறைக்கு கிடைத்த பரிசு” என சமூகவலைத்தளங்களில் நிலக்கரி தொழிலாளிக்கு பாராட்டுகளை தெரி வித்து வருகின்றனர். அதே போல நிலக்கரி தொழிலாளியை கவுரவித்த வைல்ட்கேட்ஸ் கூடைப்பந்து அணியும் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றன.