states

செப் 30 இல் நிலஉரிமை கோரி- தீண்டாமைக்கு எதிராக நேரடி களப் போராட்டங்கள்

சென்னை,செப்.27-  தஞ்சைத் தரணியில்  பொருளா தார, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதி ராக களம் கண்ட   பொதுவுடமை இயக்க தலைவர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தில் பட்டியல் சாதி மக்களின் நிலம் உரிமை கோரியும்  தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் நேரடி களப்போராட்டங்களை செப்டம்பர் 30 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  தமிழ்நாடு முழுவதும் நடத்துகிறது. தர்மபுரி மாவட்டம், பெண்ணாகரம் வட்டம்,  மஞ்சநாயக்கனஅள்ளி, கலப்பம்பாடி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 353 பேருக்கு வீட்டு மனை கேட்டு நிலத்தில் குடியிருக்கும் போராட்டம்; சிவகங்கை மாவட்டம், திருப்புவ னம் வட்டம், பூவந்தி (சர்வே எண் 65/1c), மடப்புரம் (சர்வே எண் 145/1c) ஆகிய கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா இடத்தை அளந்து கொடுக்க வலி யுறுத்தி  நிலத்தில் காத்திருக்கும் போராட்டம்; திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு ஒன்றியம், அருங்குணம் ஆதிதிராவிட மக்களின் சுமார் 100  ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்புபோராட்டம்;  திருவள்ளூர் மாவட்டம்,

கும்மி டிப்பூண்டி வட்டம், சிறுபுழல்பேட்டை - எம்.ஜி.ஆர்.நகர், பில்லாங்குப்பம், மேல்முதலம்பேடு ஆகிய 3 பகுதிகளில் உள்ள பட்டியலின மக்களுக்கு பட்டா கேட்டு வட்டாட்சியர் அலு வலகத்தில் காத்திருக்கும் போராட்டம்;  கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி  வட்டம், கோட்டையூர் பட்டியலின மக்க ளுக்கு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தை அளந்து கொடுக்காததால் நிலத்தை கைப்பற்றும் போராட்டம்;  விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில் தெரு பட்டியலின மக்க ளுக்கான மயானப் பாதையில் உள்ள  தீண்டாமைச் சுவரை அகற்றும் போராட்டம்; விருதுநகர் மாவட்டம், இராஜ பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42 ஆவது வார்டு திருவள்ளுவர் நகர், நெசவாளர் காலனி பட்டியலின மக்களின்  மயானத்திற்கு பாதை கேட்டு காத்திருக்கும் போராட்டம்; ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், தோப்பூர் அருந்ததியர் மக்களின் குடியிருப்பிற்கும், ஈரோடு தாலுகா ஊனாட்சிபுதூர் பட்டியலின மக்களின் குடியிருப்பிற்கும் பட்டா,பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பின்னலாடை தொழில் கூடங்களை செயல்படுத்திட வும், அந்தியூர் வட்டம், மைக்கேல் பாளையம் கிராமம் க.மேட்டூர், இந்திரா  நகர், வையங்குட்டை, பாறையூர் பட்டி யலின மக்களின்  மயான ஆக்கிர மிப்பை அகற்றிடவும்,  வேம்பத்தி கிராமம், கூலிவலசில் அருந்ததியர் மக்கள் குடியிருப்பு பகுதியில் நீர்  வழித்தடத்தை அழித்து நில உடமை யாளருக்கு வண்டித்தடம் அமைப்ப தை கைவிடக்கோரி உள்ளிட்ட  கோரிக் கைகளுடன்  ஆட்சியர் அலுவல கத்தில் காத்திருக்கும் போராட்டம்;

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சேவுகம்பட்டி தலித் அருந்ததியர் மக்களுக்கு வழங்கிய பட்டா இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி நிலத்தில்  காத்திருக்கும் போராட்டம்;  திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், ஈட்டிவீரம்பாளையம் மக்க ளுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா இடத்தை அளந்து கொடுக்க வலி யுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம்;  மதுரை புறநகர் மாவட்டம், உசிலம்பட்டி ஒன்றியம், தொட்டப்ப நாயக்கனூர் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா இடத்தை அளந்து கொடுக்க வலி யுறுத்தி குடியேறும் போராட்டம்;  கடலூர் மாவட்டம், ராமாபுரம் சமத்துவ புரத்திற்கு மயான வசதியும்,  புவனகிரி வட்டம், ஜெயங்கொண்டான் மற்றும் மருதூர் கிராம அருந்ததிய மக்களுக்கு மயான வசதியும் கேட்டு  போராட்டம்;  செங்கல்பட்டு மாவட்டம், மது ராந்தகம் வட்டம், பொற்பனங்கரணை கிராமத்தில் ஆதிதிராவிட மக்களின் மயான பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் போராட்டம்;  கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் கிராமத்தில்  பழங்குடி யின மக்களுக்கு வழங்கிய வீட்டுமனை பட்டாவை அளந்து கொடுக்க வலி யுறுத்தி இயக்கம்  நடைபெறுகிறது.