tamilnadu

img

சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் அவசியம்

சென்னை, செப். 27- “சாதி ஆணவப் படுகொலை களுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றப்படவேண்டியது அவசி யம் என்று சென்னையில் நடை பெற்ற  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிறப்பு மாநாடு  வலியுறுத்தியுள்ளது. சென்னை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே வியாழனன்று (செப். 26) நடை பெற்ற இம்மாநாட்டிற்கு மாநில  சிறப்பு தலைவர் எஸ்.கே. மகேந்திரன் தலைமையேற்றார்.  “இதுவரை தமிழ்நாட்டில் 198 ஆணவப் படுகொலைகள் நடைபெற்றுள்ளதாக வழக்கு கள் பதியப்பட்டுள்ளன. அப்படி பதிவு செய்யப்பட்ட  வழக்குகளில் குற்றவாளி களுக்கு தற்போதுள்ள சட்டத்தின்  மூலம் தண்டனை கிடைக்குமா  என்றால் அதற்கான வாய்ப்புக் கள் இல்லை. ஏனென்றால் இது போன்ற வழக்குகளில் 4 விழுக் காட்டினருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களெல்லாம் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி வழக்குகளில் இருந்து விடுபடக் கூடிய அவல நிலை நாடு முழுவதும் நீடிக்கிறது. எனவேதான், தேசிய சட்ட  ஆணையம் 2012ஆம் ஆண்டு இதுபோன்ற படுகொலைகளை தடுப்பதற்கு தனி சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்  என ஒன்றிய அரசுக்கு பரிந்துரை  செய்தது. ஆனால் 12 ஆண்டுகள்  கடந்தும் சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. ஒரு  இஸ்லாம் இளைஞர் பட்டியலின பெண்ணை காதலித்தார் என்ற  காரணத்திற்காக அவர் படு கொலை செய்யப்பட்டார். தற்போதுள்ள குற்றவியல் சட்டங் களின் படி அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டால் அந்த குடும் பத்தை பாதுகாக்க முடியுமா? தனி சிறப்புச் சட்டம் கொண்டு  வந்தால்தான் ஆணவப் படுகொ லைகளை ஓரளவுக்கு தடுத்து நிறுத்த முடியும். எனவே தமிழ் நாடு தனி சிறப்புச் சட்டத்தை உட னடியாக இயற்ற முன்வர வேண்டும்” என்று எஸ்.கே. மகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.  

24 ஆண்டுகள் காத்திருக்கும் அவலம்

பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் பேசுகையில், “அனுசுயா என்ற பெண் சுபாஷ்  என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். சுபாசின் வீட்டில் திடீரென விருந்துக்கு அழைத்தனர். அவர்கள் சென்றபோது அவரின்  தந்தை சுபாசை அடித்துக் கொல்கிறார். தடுக்கவந்த பாட்டி யும் கொல்லப்படுகிறார். மேலும் வெட்டுப்பட்டு குற்றுயிராக தப்பிய அனுஷியா வேறொரு குடும்பத்தினரின் உதவியோடு மருத்துவமனையில் அனு மதிக்கப்படுகிறார். அந்த  வழக்கு இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. தஞ்சா வூர் மாவட்டத்தை சேர்ந்த அபி ராமி என்ற பெண்,  சூரக்கோட்டை  கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்ற வாலிபரை காதல் திரு மணம் செய்து கொண்டு திரு வொற்றியூரில் வசித்து வந்தனர்.  இதனை அறிந்த அபிராமியின் சகோதரர், மாரிமுத்துவிடம் அன்பாகப் பேசி அழைத்துச் சென்று கொடூரமாக படுகொலை  செய்தனர். இப்படி எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. தற்போதுள்ள சட்டங்களே போதுமானது என அரசு கூறு கிறது. அப்படியென்றால் ஒரு வழக்கில் நீதி பெற ஏன் 15  ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது? கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  கண்ணகி, முருகேசன் இருவ ரின் காதிலும் விஷத்தை ஊற்றி  கொடூரமாக ஆணவப் படு கொலை செய்யப்பட்ட வழக்கில் 24 ஆண்டுகளுக்கு பிறகு  தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு நீதிக்கான போராட்டத்திற்கு 24  ஆண்டுகள் அலைய வேண்டிய  சூழ்நிலை இருப்பதால்தான், தனிச்சட்டம் கொண்டுவர வேண் டும் என வலியுறுத்துகிறோம்” என்றார்.

திரைக்கலைஞர் ரோகிணி

தமுஎகச மாநில துணைத் தலைவர் திரைக்கலைஞர் ரோகிணி பேசுகையில், சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என போராடிக்  கொண்டிருக்கும் இந்த தரு ணத்தில்தான், உச்சநீதிமன்றம் ‘காப் பஞ்சாயத்திற்கு’ தடை  விதித்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஆணவப் படுகொலை என்பது அந்த குடும்பத்தின ரால் மட்டும் நடத்தப்படுவ தில்லை; சமூக அழுத்தத்தின்  காரணமாகவே நடைபெறுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  போக்சோ சட்டம் கொண்டு வந்த பின்புதான் பலருக்கு உரிய தண்டனை பெற்றுத்தர முடி கிறது. அதுபோல் ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்பு  சட்டம் கொண்டு வந்தால் தான் சாதி ஆணவப் படுகொலை களை தடுத்து நிறுத்த முடியும். அனைவரும் இதுபோன்ற சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.ராதிகா பேசுகையில், “தனிச்சட்டம் தேவையில்லை என முதல மைச்சர் கூறிய பிறகு, இதுவரை 12 ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. தற்போதும் காத லித்த இணையரை இழந்து நூற்றுக்கணக்கானோர் நீதி மன்றத்தை நாடிக் கொண்டிருக் கிறார்கள், சமூகத்தில் சுதந்திர மாக வாழ வழியில்லாமல்  தவித்துக் கொண்டிருக்கிறார் கள் என்பதை மறந்து விடக்  கூடாது. சுய சாதிப் பெருமை களை பாதுகாப்பதற்காக தங்கள் சந்ததியினரை படு கொலை செய்யும் கொடூரத்தை எப்படி அனுமதிக்க முடியும்” எனக் கேள்வி எழுப்பினார்.

அமைப்பின் தலைவர் த.செல்லக்கண்ணு, மாநில  துணைப் பொதுச்செயலா ளர்கள் க.சுவாமிநாதன், பி. சுகந்தி, வழக்கறிஞர் ஆர்.திரு மூர்த்தி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாநில துணைத்  தலைவர் தீ.சந்துரு ஆகியோ ரும் பேசினர். முன்னதாக சாதி ஆணவப் படுகொலையில் இணையரை இழந்து நீதிக்காக  போராடி வரும் அனுசுயா மற்றும்  திலிப்குமார் ஆகியோருக்கும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கே.சி.காரல் மார்க்ஸ், டி.ஆர். உதயகுமார், ஆர்.திருமூர்த்தி  ஆகியோரும் கவுரவிக்கப்பட்ட னர். முன்னதாக வடசென்னை மாவட்டச் செயலாளர் வி.ஜானகி ராமன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் எம்.ராஜ்குமார் நன்றி கூறினார். இதில் மாநில பொரு ளாளர் இ.மோகனா, மாநிலக் குழு உறுப்பினர் வீ.ஆனந்தன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எம்.மதியழகன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.