games

img

விளையாட்டு...

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் நடைபெற்ற 45ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில், இந்திய ஓபன் (ஆடவர்)  மற்றும் மகளிர் என இரு அணிகளும் தங்கப்பதக்கம் வென்று அசத்தின. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இது என்ற நிலையில், ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணியில் விளையாடிய தமிழ்நாட்டின் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி மற்றும் ஸ்ரீநாத் (இருப்பு - சென்னை) ஆகியோர் திங்களன்று நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னை வந்தனர். ஹங்கேரியில் இருந்து ஜெர்மனி வழியாக லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு திரும்பிய மூவருக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி : குகேஷ்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மாஸ்டர் பிளான் கேப்டனாக ஜொலித்த தமிழ்நாட்டின் குகேஷ் அளித்த பேட்டியில், “நடப்பு உலக சாம்பியன் சீனாவைச் சேர்ந்த டிங் லைரின் என்னோடு விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால், அவர் வரவில்லை. என்றாலும் மாற்று வீரருக்கும் தயாராக இருந்தேன். என்னை முதல் போர்டில் விளையாட வைத்தது கேப்டன் ஸ்ரீநாத்தின் வியூகம். அதனால்தான் தொடர்ந்து நானும், எரிகேசியும் வெற்றி பெற முடிந்தது. சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் கடைசி சுற்று போட்டிகளில் கோட்டை விட்டோம். அதை உணர்ந்து இம்முறை அமெரிக்காவுடன் வெற்றியை நோக்கி விளையாடினோம். அதனால்தான் அமெரிக்காவை வீழ்த்த முடிந்தது. ஆண்கள், பெண்கள் என இரண்டு அணிகளும் தங்கப்பதக்கம் வென்றுள்ளது சிறப்பான தருணம். ஒலிம்பியாட் போட்டிகளில் அதிக முறை தோல்விகளை சந்தித்திருக்கிறோம். சென்னையில் நடந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளோம். தொடர் பயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இந்த தங்கப் பதக்கம். இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்ததுதான் இந்த தங்கப் பதக்கம்” என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணிக்குள் வலுக்கும் “ஈகோ” சண்டை வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை

கிரிக்கெட் உலகில் இந்திய ஆட வர் அணியைப் போலவே பாகிஸ் தான் அணியும் மிக வலுவான நிலை யில் இருந்தாலும் வீரர்களுக்கு இடை யே இருக்கும் “ஈகோ” சண்டையால் அந்த அணி வெற்றியை குவிக்க முடி யாமல் திக்கு திணறி வருகிறது. நன்றாக விளையாடியும் வீரர்களின் ஒற்றுமை யற்ற ஆட்டத்தால் டி-20 உலகக் கோப்பையில் லீக் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியது. அதே போல சமீபத்தில் நிறைவு பெற்ற வங்க தேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி யிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை தழுவி தொடரை இழந்தது. இந்த தொடர் தோல்விக்கு வீரர்களுக்கு இடையே இருக்கும் “ஈகோ” சண்டை தான்  காரணம் என பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் (தென் ஆப்பிரிக்கா) குற்றம்சாட்டினார். இதனையடுத்து அதிரடியில் இறங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி சல்மான் நசீர், “வீரர் களுக்கு இடையே இருக்கும் பிரச்ச னையை சரி செய்வதற்காக முகாம் நடத்தியுள்ளோம். அம்முகாமில் ஒவ் வொரு வீரர்களும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுகிறோம் என்ப தை உணர்ந்து செயல்பட எச்சரிக்கை விடுத்துள்ளோம். மேலும் வீரர்களின் செயல்பாடுகளை எவ்வாறு அதிகரிப் பது? ஒரு அணியாக ஒருங்கிணைந்து எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து இந்த முகாமில் வலியுறுத்தப் பட்டுள்ளது” என அவர் கூறினார்.  வீரர் களின் “ஈகோ” சண்டைக்காக கிரிக்கெட் அணி ஒன்று முகாம் நடத்தியுள்ளது  கிரிக்கெட் உலகில் ஆச்சர்யத்தை ஏற் படுத்தியுள்ளது.