districts

img

ஒப்பந்த முறையை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர்/கரூர், செப்.27 - தினசரி, அவுட்சோர்சிங், ஒப்பந்த முறையை கைவிட வேண்டும், அவ்வாறு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை நிரந்தர அரசு பணியாளராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை, அரசு துறை களை தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கம் சார்பாக அகில இந்திய  கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் வியாழ னன்று நடைபெற்றது.  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் எஸ்.செங்குட்டுவன் தலைமை  வகித்தார். மாநில துணை பொதுச்செயலா ளர் வெ.சோமசுந்தரம் போராட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர்  செ.பிரகாஷ், முன்னாள் மாநிலச் செயலாளர்  எம்.செளந்தரராஜன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலா ளர் குரு.சந்திரசேகரன் ஆகியோர் கோரிக் கையை வலியுறுத்தி பேசினர்.  கரூர்  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட துணைத் தலைவர் சங்கர்  தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மு.செல்வராணி, மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம், முன்னாள் மாநிலச் செய லாளர் மு.சுப்பிரமணியன், அனைத்து துறை  ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கெ.சக்திவேல், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி  ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர்  ஜ.ஜெயராஜ் ஆகியோர் உரையாற்றினர்.