tamilnadu

img

சிபிஎம் மாநில மாநாடு எழுச்சியுடன் துவங்கியது!

விழுப்புரம், ஜன. 3 - 2025 ஜனவரி 3 வெள்ளியன்று காலை விழுப்புரம் நகரமே சிவப்புப் பூவாய் பூத்திருந்தது.  நகர் முழுவதும் செங்கொடிகள் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தன. மாநாடு நடைபெறும் ஆனந்தா மஹால், தமிழக பாட்டாளி மக்களின் பொருளா தார விடுதலைக்கும், சமூக விடு தலைக்கும் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த மகத்தான கம்யூனிஸ்ட் தலைவர்கள் உருவப் படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  நுழைவு வாயிலில், தமிழகம் முழு வதும் இருந்து வந்துள்ள வர்க்கப் படை களின் தளபதிகளான மாநாட்டுப் பிரதி நிதிகளை வழக்கமான புன்சிரிப்புடன் வர வேற்றுக் கொண்டிருந்தார், அவர்களது உள்ளம் நிறைந்த தலைவர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன். அவரது உரு வப்படத்துடன் அமைந்திருக்கும் பிரம் மாண்ட நுழைவு வாயில், பிரதிநிதிகளை யும், பொது மாநாட்டிற்கு வந்திருந்த  தோழர்களையும் உணர்ச்சி வசப்படுத்தியது. உள்ளே நுழைந்தவுடன், இந்திய தேசத்தின் காவலராக தனது வாழ்க்கை யையே அர்ப்பணித்த மகத்தான தலை வர் சீத்தாராம் யெச்சூரியும், வாழ்நாள் முழுவதும் பாட்டாளி வர்க்க சங்கநாத மாக முழங்கிய மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என். சங்கரய்யாவும் பெரிய அளவிலான சிலைகள் போன்ற வடி வமைப்பில் நின்றவாறு எல்லோரையும் தங்கள் தோழமையால் ஆகர்சித்தனர்.  - இது, தமிழக பாட்டாளி வர்க்கத்தின் நம்பிக்கை பேரொளியாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24ஆவது மாநாடு. அதன் உணர்ச்சிமிகு துவக்க விழா வில், உற்சாகப் பெருவெள்ளத்தை பாய்ச்சியது புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி. 

 வானில் உயர்ந்த செங்கொடி

அரசியல் தலைமைக்குழு ஒருங் கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அர சியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி. ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.  பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப் பினர்கள் ஏ.கே. பத்மநாபன், உ. வாசுகி,  பி. சம்பத், பெ. சண்முகம், ஆர். கரு மலையான், மூத்த தலைவர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன்  மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப் பினர்கள், பிரதிநிதிகள் புடைசூழ, மது ரையில் இருந்து எடுத்துவரப்பட்ட தியாகி லீலாவதி உள்ளிட்ட தியாகி களின் நினைவுச் செங்கொடியை மூத்த தலைவர் ஏ. லாசர் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே தொழிலாளி வர்க்கத்தின் உதிரச் செங்கொடியை ஏற்றி வைத்தார் கட்சியின் மூத்த தலை வரும் மார்க்சிய அறிஞருமான எஸ்.ஏ. பெருமாள். இதையடுத்து தியாகிகள் ஸ்தூ பிக்கு தலைவர்களும் பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தினர்.

பொது மாநாடு

பின்னர் நடைபெற்ற பொது மாநாட் டிற்கு மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண் முகம் தலைமை தாங்கினார். வரவேற்பு குழுத் தலைவர் ஆர்.ராமமூர்த்தி வர வேற்றார். மத்தியக்குழு உறுப்பினர் உ.  வாசுகி அஞ்சலி தீர்மானத்தை முன் மொழிந்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் வாழ்த்திப்  பேசினர்.  முன்னதாக, தாம்பரத்தில் இருந்து  145  கி.மீ. சைக்கிளிலேயே மாநாட்டு  அரங்கிற்கு வந்த இளம் தோழர்  ஆதித்யாவை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் சால்வை அணிவித்து பாராட்டினார்.  பிரதிநிதிகள் மாநாடு பின்னர் தொடங்கிய பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தலைமையேற்று வழி நடத்த பெ. சண்முகம், ஜி. சுகுமாறன், பா. ஜான்சிராணி, ஆர். சச்சிதானந்தம் எம்.பி., எஸ்.கீதா, தௌ.சம்சீர் அகமது ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்யப் பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அர சியல் – அமைப்பு – வேலை அறிக்கையை சமர்ப்பித்துப் பேசினார். இந்த அறிக்கை மீது பிரதிநிதிகள் விவாதம் துவங்கியது. இந்த விவாதம் சனிக்கிழமையும் தொடர்கிறது.

செம்படைப் பேரணி- பொதுக் கூட்டம்

மாநில மாநாட்டின் முத்தாய்ப்பு நிகழ் வாக மாபெரும் செந்தொண்டர் அணி வகுப்பு மாலை 5 மணிக்கு மாநாட்டு அரங்கில் இருந்து பெரும் எழுச்சியுடன் புறப்பட்டது. பல்லாயிரக்கணக்கான செந்தொண்டர்கள் மிடுக்குடன் நடை போட்ட அந்த அணிவகுப்பை மூத்த தலைவர் அ. சவுந்தரராசன் தொடங்கி வைத்தார். நிறைவாக விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே தோழர் என்.சங்கரய்யா நினைவுத் திடலில் (நகராட்சி மைதானம்) பல்லாயிரக்கணக் கானோர் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப் பினர்கள் ஜி. ராமகிருஷ்ணன், பிருந்தா  காரத், மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்றினர்.