tamilnadu

img

கொடநாடு வழக்கிலும் விரைவில் தீர்ப்பு!

கொடநாடு வழக்கிலும் விரைவில் தீர்ப்பு!

எடப்பாடி பழனிசாமிக்கு மு.க. ஸ்டாலின் பதிலடி உதகை, மே

பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை வழக்கை போன்றே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஐந்து நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முத லமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, உதகையில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விருந்தினர் மாளிகை யில் தங்கியுள்ள அவர், புதனன்று (மே 14) காலை 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரம் உதகை விளை யாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் யார் குற்ற வாளியாக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு செல் வந்தர்களாக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள் எனத் தெரிவித்திருந்தேன். அதுபோலவே, தற்போது தீர்ப்பு கிடைத்துள்ளது. இதேபோல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வரும்” என்று தெரிவித்தார். “சட்டமன்றக் கூட்டத்தில் கூட ‘அதிமுகவின் பொள்ளாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி’ என்றும் கூறியிருந்தேன்.  ஆனால், இந்த தீர்ப்புக்கு தாம் தான் காரணம் என்று எடப் பாடி பழனிசாமி கூறி வருகிறார் என்றும் குறிப்பிட்டார்.