உதகை, நவ.17- மார்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளராக வி.ஏ.பாஸ் கரன் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் நீலகிரி மாவட்ட 12 ஆவது மாநாடு கூடலூர் காந்தி திடலில், என். சங்கரய்யா நகரில் (ஜானகி அம்மாள் மண்டபம்) சனியன்று துவங்கியது. மாநாட்டு கொடியை கூடலூர் நகர் மன்ற உறுப்பினர் லீலா வாசு ஏற்றி வைத்தார். பிரதிநிதிகள் மாநாட்டில், மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ் கரன் அறிக்கையை முன்வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் கே. காமராஜ், ஆர்.பத்ரி, கே.நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். புதிய மாவட்டக் குழு தேர்வு மாநாட்டில், 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக வி.ஏ. பாஸ்கரன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். செயற்குழு உறுப்பினர் களாக எல்.சங்கரலிங்கம், ஆ.யோக் கண்ணன், எம்.ஏ.குஞ்சு முகம்மது, சி. வினோத், ஏ.ஆர்.ஆஜரா, கே.சுந்தரம், எம்.ஆர்.சுரேஷ் ஆகியோர்
தீர்மானங்கள்
இம்மாநாட்டில், நீண்ட காலமாக தொடரும் கூடலூர் மக்களின் நில உரிமை கோரிக்கை வென்றெடுக்க, கட்சி தலைமையில் ஒரு போராட்டக் குழுவை அமைத்து தீர்வு காணும் வரை வலுவான தொடர் இயக்கம் மேற் கொள்வது; ஸ்ரீமதுரை ஊராட்சியில் நீண்ட காலமாக மக்கள் குடியிருந்து வரும் நிலத்தை வனநிலமாக அறி வித்து மக்களை வெளியேற்ற நோட்டீஸ் வழங்கிய அரசு நடவடிக்கையை எதிர்த்து, பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து வலுமிக்க போராட்டம் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப் பட்டது. வனவிலங்கு தாக்குதலில் இருந்து மக்களையும், விவசாயப் பொருட் களையும் பாதுகாப்பதற்கும் அறி வியல் ரீதியான நடவடிக்கையை அர சாங்கம் மேற்கொள்ள வேண்டும். தேயி லை, மலைக்காய்கறி, வாழை மற்றும் விவசாயப் பொருட்களுக்கு நியாய மான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வனத்தில் கிடைக்கக்கூடிய பொருட்களை சேகரித்து விற்பனை செய்வதற்காக பழங்குடி மக்களுக்கு உரிமையும், பழங்குடி மக்களின் மேய்ச்சல் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். நீலகிரி மாவட்டத்திற்கு ஏற்படுத்திய இ - பாஸ் முறை ரத்து செய்ய தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அரசு நிறுவனமான ‘டேன் டீ’யை பாதுகாக்க வேண்டும். வனவிலங்குகள் தாக்குதலில் மரணமடைந்தால் ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். பயிர்கள் மற்றும் வீடுகள் சேததத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஞாயிறன்று மாலை செந் தொண்ட அணிவகுப்பும், தோழர் சீத்தா ராம் நகரில் (சுங்கம் திடல்) பொதுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் உள்ளிட்ட தலை வர்கள் உரையாற்றினார். திரளான மக்கள் கலந்து கொண்டனர்.