states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கர்நாடகாவில் காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டேன். ஆனால் எனது சவால் பற்றி மோடி பேசவில்லை. பொய் குற்றச்சாட்டை கூறிவிட்டு சவாலை ஏற்க எதற்கு பயப்படுகிறார் மோடி?

ஒரே நாடு, ஒரே தேர்தல் என பாஜகவினர் கனவு கண்டு வருகிறார்கள். ஆனால் பாஜகவின் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு ஒரு தேர்வு, ஒரு வேளை என்பதில் பின்வாங்குகிறது. என்னவென்று புரியவில்லை.

பீகார் மாநிலத்தின் நாளந்தாவில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி என்எம்சிஎச் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால் மருத்துவமனையில் இளைஞரின் கண்கள் அகற்றப்பட்டது. இதுகுறித்து கேள்வி கேட்டால் கண்களை எலிகள் தின்றுவிட்டன என மருத்துவமனை நிர்வாகம் கூறியது. பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி இருப்பதால், இந்த செய்தி நாட்டின் பெரிய ஊடக நிறுவனங்களுக்கு முக்கியமில்லாமல் இருக்கலாம்.

அதானி மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை. ஆனால் மகாராஷ்டிராவுக்கு அதானி எதிரியாக இருக்கிறார் (தாராவி திட்டம்). அதனால் அதானி எனக்கும் எதிரிதான்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசுக்கு தேசிய  மக்கள் கட்சி (என்பிபி) வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. வடகிழக்கு மாநிலத்தில் “நெருக்க டியைத் தீர்க்கவும், இயல்புநிலையை மீட்டெடுக்க வும் என் பைரன் சிங் ஆட்சி முழுமையாகத் தவறி விட்டது” எனக் கூறி என்பிபி கட்சி குற்றம் சாட்டி யுள்ளது. 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்  பூர் சட்டமன்றத்தில் என்பிபிக்கு 7 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உச்சிலா கடற்கரைக்கு அருகே அமைந் துள்ள ஒரு தனியார் பீச் ரிசார்ட்டில் நிகழ்ந்த விபத்தில் மைசூரை சேர்ந்த நிஷிதா, பார்வதி மற்றும்  கீர்த்தனா ஆகிய 3 இளம் பெண்கள் உயிரிழந்தார்.  6 அடி ஆழ நீச்சல் குளத்தில் முதலில் ஒருவர் மூழ்கிய நிலையில், காப்பாற்ற முயன்று மற்ற இருவரும் உயிரிழந்தனர்.

மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறை சம்ப வங்களால் ஒன்றிய உள்துறை அமித் ஷா  மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் தேர்தல் பிரசாரங்களை ரத்து செய்து தில்லித் திரும்பினார்.

“மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை பரவத்தொடங்கியுள்ளது. ஆளும் பாஜக மணிப்பூர் பற்றி எரிவதை விரும்புவதாக தெரி கிறது” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

தில்லி பாஜக மூத்த தலைவரும், இரண்டு முறை  எம்எல்ஏவாக இருந்தவருமான கிராரி  அனில் ஜா, அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை யில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

“அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை மீண்டும் மிரட்டல் வேலையில் இறங்கி யுள்ளது. சிறைக்குச் செல்வதை விட அசோக் கெலாட் பாஜகவில் சேருவது நல்லது” என ஆம்  ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா  கக்கர் கூறியுள்ளார்.

“ஜார்க்கண்டில் ஜேஎம்எம் தலைமை யிலான கூட்டணி அரசு மலை போல் நிற்கிறது. அந்த மலையை பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது” என ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.

“மகாராஷ்டிர மதச்சார்பற்ற மக்கள் பாஜக  தலைமையிலான மகாயுதியின் பிரி வினைவாத அரசியலை நிராகரிப்பார்கள்” என  காங்கிரஸ் மூத்த தலைவர் இம்ரான் பிரதாப்காரி கூறினார்.