மதுரை, நவ.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை புறநகர் மாவட்ட 24வது மாநாடு திருமங்கலத்தில் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் நினைவரங்கத்தில் நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நவம்பர் 16 துவக்க நிகழ்வில் மாநாட்டு செங்கொடியை கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் ஏற்றினார். மாநாட்டிற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் த.செல்லக்கண்ணு, பி.ஜீவானந்தம், க.பிரேமலதா ஆகி யோர் தலைமை வகித்தனர். மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். நவம்பர் 17 ஞாயிறு அன்று இரண் டாம் நாள் மாநாட்டில் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன் அறிக்கை மீதான விவாதத்திற்கு தொகுப்புரை வழங்கினார். மாநாட்டை வாழ்த்தி கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் பேசினார். மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் பேசி னார். ஆர்.மூர்த்தி நன்றி கூறினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய மாவட்டக்குழு தேர்வு
மாநாட்டில் 35 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செய லாளராக கே. ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்களாக எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, பா.ரவிச்சந்திரன், த.செல்லக்கண்ணு, எஸ்.பி.இளங் கோவன், வி.பி.முருகன், செ.முத்து ராணி, பி.ஜீவானந்தம், வி.சமையன், எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
மதுரை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி பெற புதிய தொழிற்சாலை கள் துவங்க வேண்டும்; எய்ம்ஸ் பணிகளை உடனே துவக்கிட வேண்டும்; அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வேண்டும்; கூடல்நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது முனையமாக செயல்படுத்திட விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும்; பெண்கள், குழந்தைகள் மீதான வன்புணர்வுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.