போபால் பாஜக ஆளும் மத்தியப்பிர தேச மாநிலத்தின் விஜய பூர் சட்டமன்ற தொகுதிக்கு நவம்பர் 13 (புதனன்று) அன்று இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற் றது. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின் கோஹ்தா கிராமத்தில் உள்ள தலித் காலனி குடியிருப்புப் பகுதி யில் புதனன்று இரவு சுமார் 200 கொண்ட கும்பல், தலித் மக்களின் வீடு களுக்கு தீ வைத்தும், வீடுகளின் ஜன் னல் கண்ணாடிகள் மற்றும் வாக னங்களை அடித்து நொறுக்கியும், மின்மாற்றியை எரித்து மின்சாரத்தை துண்டித்து வன்முறையில் ஈடுபட்டது. மேலும் கோஹ்தா கிராமத்திலிருந்த அம்பேத்கர் சிலை மீதும் தாக்குதல் நடத்தி, அவமதிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. தலித் மக்கள் மீதான தாக்குதலை ஆதரிக்கும் காவல்துறை இந்நிலையில், தலித் மக்களின் மீது தாக்குதல் நடத்திய 200 பேர் கொண்ட கும்பல் எந்த அமைப்பைச் சேர்ந்தது? எதற்காக தாக்குதல் நடத்தினர்? என பல்வேறு கேள்விகள் எழுந்துவரு கிறது. ஆனால் தலித் மக்கள் மீதான தாக்குதலை ஆதரிக்கும் வகையில் மத்தியப்பிரதேச காவல்துறை செயல் பட்டு வருவது கடும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.
தலித் மக்கள் வீடுகள் மீதான தாக்கு தல் தொடர்பாக ஷியோபூர் மாவட்ட எஸ்.பி., வீரேந்திர ஜெயின் செய்தியா ளர்களிடம்,”இது சாதி மோதல் அல்ல. இரு தரப்பினருக்கும் இடையே சிறிய தகராறு என விசாரணை மூலம் தக வல் கிடைத்துள்ளது. தாக்குதல் தொட ர்பாக முறையான புகார் எதுவும் செய்யப்படவில்லை. மேலும் யாருக் கும் காயங்கள் எதுவும் இல்லை. அத னால் இது பெரிய பிரச்சனை இல்லை” என அலட்சியமாக கூறினார். அதே போல மற்றொரு போலீஸ் அதிகாரி,”தேர்தல்களின் போது இது போன்ற பதற்றங்கள் பொதுவா னவை தான். முறையான புகார் வந் தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப் படும்” என கூறினார். சிபிஎம் கண்டனம் “பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் தலித்துகள் மீதான தாக் குதல் அவமானகரமானது ஆகும். பாஜக ஆளும் மாநிலங்களில் சட்ட விரோத சம்பவங்கள் தலைவிரித்தாடு கின்றன” என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. அதே போல மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி, ”பழங்குடியினர் மற்றும் தலித் சமூ கங்களை பாஜகவினர் தொடர்ச்சி யாக தாக்கி வருகின்றனர். கோஹ்தா கிராமத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக இது வரை யாரும் கைது செய்யப்பட வில்லை” என குற்றம் சாட்டினார்.