லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தின் முக் கிய நகரான ஜான்சி நக ரில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் வெள்ளியன்று ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தை கள் உயிரிழந்தனர். 16 குழந்தைகள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றன. அவர்களில் 7 குழந் தைகளின் நிலைமை மோசமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்நிலையில், தீ விபத்து நடந்த மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையை பார்வையிட உத்தரப்பிர தேச பாஜக துணை முதல்வர் ராஜேஷ் பதேக்கிற்கு சனியன்று சென்றுள்ளார். தேர்தல் பிரச்சா ரத்திற்கு வரவேற்பது போல ராஜேஷ் பதேக்கை வரவேற்க ஜான்சி நகர உள்ளூர் அரசு நிர்வாகம் வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ள சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரிஜேஷ் பதேக்கிற்கு வர வேற்பு அளிக்க ஜான்சி நகரில் சாலை சுத்தம் செய்யப்பட்டு சுண்ணாம்பு இடப்பட்டது. அதே போல மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு முன் திருமண விழாவிற்கு போடப்படுவது போல பந்தல் போடப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு வர வேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்க ளில் வெளியாகியுள்ளது. இதனை கண்டித்து காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மருத்து வமனை முன்பு போராட்டத்தில் ஈடு பட்டன.