states

img

மணிப்பூரைச் சேர்ந்த 19 பாஜக எம்எல்ஏக்கள் மோடி அரசுக்கு கெடு

ராஜினாமா செய்வதாகவும் எச்சரிக்கை

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிபூரில் பாஜகவின் வகுப்புவாத  அரசியலால் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பற்றி எரிந்து வரு கிறது. இன்னும் வன்முறை சம்ப வங்கள் கட்டுக்குள் வராத சூழலில், சமீபத்தில் குக்கி பழங்குடியின இளம்பெண் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வன் முறையாளர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம்  ஜிரிபாம் மாவட்டத்தில் குக்கி  பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த தாக சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் குக்கி பழங்  குடியினத்தைச் சேர்ந்த 11 பேர்  சுட்டுக்கொல்லப்பட்டனர்.அடுத்த 2  நாட்களில் காணாமல் போனதாக கூறப்படும் மெய்டெய் பிரிவைச் சேர்ந்த 6 பேர் சடலங்களாக மீட்கப்  பட்டனர். இவ்வாறு மணிப்பூரில் கடந்த 10 நாட்களில் 20க்கும் அதி கமானோர் உயிரிழந்தனர். இதற்கிடையே மணிப்பூரில் வன்முறை கட்டுப்படுத்துவதாக கூறி மேற்கு மாவட்டத்தின் சேக்  மாய், லாம்சங், இம்பால் கிழக்கு  மாவட்டத்தின் லாம்லை, ஜிரிபாம்  மாவட்டம் முழுவதும், காங்போக்பி யின் லீமாங்கோங் மற்றும் பிஷ்ணு பூரின் மோய்ராங் உள்ளிட்ட 6 காவல் நிலையப் பகுதிகளில் ஆயு தப் படைகளின் சிறப்பு சட்டத்தை  ஒன்றிய அரசு மீண்டும் அமல்படுத்தி யது.

7 மாவட்டங்களில் ஊரடங்கு

மாநிலத்தில் நீடிக்கும் வன்  முறை, ஆயுத படைகள் (சிறப்பு அதி காரங்கள்) சட்டம் போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜிரிபாம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் போராட்டம்  நடைபெற்று வருகி றது. போராட்டத்துடன் வன்முறை  சம்பவங்களும் நிகழ்ந்து வருவ தால் 7 மாவட்டங்களின் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இணைய சேவைகளும் துண்டிக் கப்பட்டுள்ளன. ஆனால் ஊரடங்கு உத்தரவை மீறி  மணிப்பூரின் பள்  ளத்தாக்கு மாவட்டங்களில் பெரும்  போராட்டம் நடந்து வருகிறது. பாஜக அமைச்சர்கள் மீது தாக்குதல் இந்நிலையில், சனியன்று இரவு  இம்பாலில் வசிக்கும் 3 அமைச்சர்  கள் மற்றும் மாநில முதல்வர் பிரேன்  சிங்கின் மருமகனும், பாஜக எம்எல்ஏவுமான ஆர்.கே.இமோ உட்பட 6 பாஜக எம்எல்ஏக்களின்  வீடுகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி னர். மேலும் சாலைகளில் டயர் களை எரித்து, போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல இடங்க ளில் வாகனங்களுக்கு தீ வைக்கப்  பட்டது. கண்ணீர் புகைக் குண்டு களை வீசி பாதுகாப்புப் படையி னர் வன்முறையாளர்களை விரட்டி யடித்தனர். ஆனாலும் வன்முறை, போரட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.

மோடி அரசுக்கு மணிப்பூர் பாஜக எம்எம்எல்ஏக்கள் எச்சரிக்கை

மணிப்பூரின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், ஆளும் பாஜக கட்சி யை சேர்ந்த 19 பாஜக எம்எல்ஏக் கள் ராஜினாமா செய்ய திட்டமிட்  டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இவர்கள் ஏற்கனவே கடந்த மாதம் மாநில முதல்வரை  மாற்றக் கோரி, பாஜக தலை மைக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதேநேரம் மணிப்பூரில் உள்ள சில அமைப்புகள், அடுத்த 24 மணி  நேரத்தில் ஆயுதமேந்திய தீவிரவா தக் குழுக்களுக்கு எதிராக கடு மையான நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அரசுக்கு கெடு விதித்  துள்ளன.

அமைச்சரைவையும் நெருக்கடி

இதனை தொடர்ந்து மணிப்பூ ரில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஆயுதப்படை சிறப்பு சட்டங்களை ஒன்றிய அரசு மீண்டும் அமல் படுத்தி உள்ளதன் காரணமாகவே வன்முறை சம்பவங்கள் தீவிர மடைந்து வருகின்றன. அந்த சட்  டத்தை விரைவில் திரும்ப பெறு மாறு ஒன்றிய அரசுக்கு மணிப்பூர் பாஜக அரசு கோரிக்கை விடுத  துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.